தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, February 28, 2014

பவானிசாகர் அருகே தலையில் தேங்காய் உடைத்து விநோத வழிபாடு



பவானிசாகர் அருகே அய்யம்பாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செய்யும் விநோத வழிபாட்டில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகரை அடுத்துள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் தொட்டம்மா, சின்னம்மா மற்றும் மகாலட்சுமி கோயில்களில் மகாசிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி வியாழக்கிழமை  மாலை 4 மணிக்கு கிராம தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு விழா தொடங்கியது.

இக்கிராமத்தில் உள்ள குரும்பர் இன மக்கள் பாரம்பரியமாக விரதம் இருந்து தங்களது இஷ்டதெய்வங்களிடம் வரம் வேண்டி வழிபட்டனர். வரம் கிடைத்த  பக்தர்கள் கோவில் கருவறையில் பூசிக்கப்பட்ட தேங்காய்களை எடுத்து வந்து பூசாரி முன்  தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

 

அதனைத் தொடர்ந்து,  மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மூலவர் வைக்கப்பட்டு  தாரை தப்பட்டை முழங்க பவானி ஆற்றுக்கு சாமி அழைப்பதற்காக புறப்பட்டு சென்றனர். அங்கு சிறப்புபூஜைகள் செய்து ஆற்றங்கரையிலும் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தனர். அதன்பிறகு,  பவானி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்தல் நிகழ்ச்சியும்  நள்ளிரவிலும் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும்  நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து, பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இக்கிராமத்தில்
விவசாயம் செழிக்கவும், கால்நடைகள் நோயின்றி வாழவும், மழை பெய்யவேண்டியும்,  தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்வது ஐதீகம் என இக்கிராம மக்கள் தெரிவித்தனர்.  அய்யம்பாளையம்,கோவை மாவட்டம் தீத்திபாளையம், அஜ்ஜனூர், கல்வீரம்பாளையம், சின்னத்தடாகம், கெம்பையனூர், வண்டிக்காரனூர், சுண்டப்பாளையம், கஸ்தூரிபாளையம், பச்சாபாளையம், ஒக்கரியூர், நாயக்கனூர் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து
குரும்பர் இன மக்கள்  5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடும்பம் சகிதமாக கலந்து கொண்டனர். விடிய விடிய நடைபெற்ற இவ்விழா பாதுகாப்பு பணியில் பவானிசாகர் போலீசார் ஈடுபட்டிருந்தனர்

0 comments:

Post a Comment