தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, February 13, 2014

கோணமூலை ஊராட்சியில் கணினி சேவை: ஊராட்சி உதவி இயக்குநர் ஆய்வு

கோணமூலை ஊராட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட கணினி சேவையை ஆய்வு செய்கிறார் மாவட்ட ஊராட்சி உதவி இயக்குநர் ரூபன்சங்கர் ராஜ்.உடன்,ஊராட்சி இணை இயக்குநர்(பயிற்சி) கா.சங்கமித்ரா, ஊராட்சித் தலைவி எஸ்.பத்மினிசண்முகம்

கோணமூலை ஊராட்சியில் செயல்படுத்தப்பட்ட கணினி சேவையை மாவட்ட ஊராட்சி உதவி இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

சத்தியமங்கலம் ஊராட்சிகுட்பட்ட கோணமூலை ஊராட்சியில் அனைத்து வரி இனங்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கணினி சர்வர் மூலம் ஊராட்சி கணினிகள் இணைக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக கையடக்க கணினி உதவியுடன் வீட்டுவரி, குடிநீர்வரி உள்ளிட்ட 34 வரியினங்களை வசூலிக்கும் வகையில் மென்பொருள் உருவாக்கப்பட்டு கோணமூலை ஊராட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இதன் செயல்பாடுகளை ஈரோடு ஊராட்சி உதவி இயக்குநர்(கிராம ஊராட்சி) ரூபன்சங்கர்ராஜ், உதவி இயக்குநர் (பயிற்சி)கா.சங்கமித்ரா ஆகியோர் வியாழக்கிழமை ஆய்வு செய்தபிறகு செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் முதன்முறையாக இந்த ஊராட்சியில் கையடக்கணினி பரிசோதனைக்காக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென தனியாக சிம்கார்டு போடப்பட்டு  ஜிபிஎஸ் மூலம் ஊராட்சி கணினியுடன் இணைக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளின் விபரங்கள் கணினியில்  பதிவு செய்யப்பட்டுள்ளது. கிராமவாசியின் கதவு எண் மற்றும் பெயரை தெரிவித்தால் அவரது வரியினங்களின் நிலுவை மற்றும் நடப்பாண்டு விபரங்கள் தெரிந்துகொள்ளலாம். தற்போது, நிலவிவரும் குடிநீர் பிரச்னையை போக்க ஊராட்சி, ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி நிதிகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆய்வின்போது ஊராட்சித் தலைவர் எஸ்.பத்மினிசண்முகம் உடனிருந்தார்.

0 comments:

Post a Comment