தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, February 11, 2014

முட்டைகோஸ் விலை வீழ்ச்சி: தாளவாடி விவசாயிகள் கவலை 

தாளவாடி பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட முட்டைகோஸ்
தாளவாடி பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட முட்டைகோஸ் விலை வீழ்ச்சியடைந்தால் தாளவாடி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.



தாளவாடி மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் 1105 மீட்டர் உயரத்தில் உள்ளதால் இப்பகுதியில் குளிர்ந்த தட்பவெப்பநிலை நிலவுகிறது. இதனால் மலைக்காய்கறி பயிர்களாகன உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், முள்ளங்கி, முட்டைகோஸ், பீட்ருட் உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.  இங்கு விளையும் காய்கறிகளை மேட்டுப்பாளையம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் கேரள மாநில வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.   


கீரை வகையைச் சார்ந்த மூன்று கால பயிரான முட்டைகோஸை நடவு செய்யும் போது கோஸ் கிலோ ரூ.12 முதல் 15 வரை விற்கப்பட்டது.  இதனால் பெரும்பான்மையான விவசாயிகளுக்கு கோஸ் மீது ஆர்வம் ஏற்பட்டதால் 65 ஆயிரம் ஏக்கரில் கணேஸ்,நீலகிரி, சாண்டஸ் போன்ற கோஸ் பயிரிட்டிருந்தனர்.  தற்போது, அறுவடைக்கு தயாரான நிலையில் கோஸ் உற்பத்தி பன்மடங்காக அதிகரித்துள்ளதால் கோசுக்கு போதிய விலை கிடைக்கவில்லை.  மேலும், நீலகிரி மலைப்பகுதியிலும் கோஸ் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டதால் மேட்டுபாளையம் காய்கறி மண்டிக்கு கோஸ் வரத்து அதிகமானதால் அதன் விலையும்  சரிந்துவிட்டது.


இது குறித்து தாளவாடியைச் சேர்ந்த மதேவப்பா கூறியது: 
 முட்டை கோஸ் ஏக்கருக்கு 20 டன் வரை மகசூல் கிடைக்கிறது.  கோஸின் வரத்தும் அதிகரித்துவி்ட்டதால் வியாபாரிகள் தோட்டத்துக்கு வந்து கிலோ ரூ.2 க்கு கொள்முதல் செய்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதன் விலை கிலோ ரூ.15 ஆக இருந்தது. தோட்டத்தில் இருந்து மேட்டுப்பாளையம் மண்டிக்கு எடுத்துச் செல்லும் போது  லாரி வாடகை, ஏற்றுக்கூலி, இறக்குக்கூலி, மண்டி கமிஷன் என அனைத்து செலவுகளையும் கணக்கிட்டால் கிலோவுக்கு 1 ரூபாய் கூட கிடைப்பதில்லை. 

சாகுபடி காலத்தில் மூன்று முறை உரமிட்டு 12 வாரங்கள் பூச்சி கொல்லி மருந்து தெளித்து, அதன் பிறகு வெட்டுக்கூலி என கணக்கிட்டால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் வரை உற்பத்தி செலவாகிறது. விவசாயிகள் உற்பத்தி செலவை கூட  ஈடுகட்டமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கோஸ் விலை உயரும் நம்பிக்கையில் விவாசயிகள் காத்திருக்கின்றனர் என்றார்

0 comments:

Post a Comment