தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, February 22, 2014

புன்செய் புளியம்பட்டி மாணவிக்கு தேசிய அறிவியல் விருது
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் வழங்கினார்
**************************************************************************

          மத்திய அரசின் மாணவர்களுக்கான சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பு விருதுகள் தேசிய தொழில்நுட்ப கழகத்தால் அறிவிக்கபட்டுள்ளது.  அதன்படி விருது வென்ற புன்செய் புளியம்பட்டி எஸ்.ஆர்.மெட்ரிக் பள்ளி மாணவி பவித்ராவுக்கு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் தேசிய அறிவியல் விருதினை வழங்கி கௌரவித்தார்


புன்செய் புளியம்பட்டி எஸ்.ஆர்.மெட்ரிக் பள்ளி மாணவி பவித்ராவுக்கு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் தேசிய அறிவியல் விருதினை வழங்கி வாழ்த்தினார்.
தேசிய அறிவியல் விருது:
************************************
         மத்திய அரசின் மாணவர்களுக்கான சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளின் விருதுகள் தேசிய அறிவியல் தொழில்நுட்ப கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 301 மாவட்டங்களில் இருந்து 20836 கண்டுபிடிப்புகள் பல பிரிவுகளாக அவர்கள் படிக்கும் வகுப்புகளை வைத்து சிறந்த கண்டுபிடிப்புகள் வகைபடுத்தப்பட்டு  அதனடிப்படையில் விருதுகள் தேர்ந்தெடுக்கபட்டுள்ளன. இதில்  ஈரோடு மாவட்டம் சத்தி வட்டம் புன்செய் புளியம்பட்டி ராதா - ராஜா சுரேந்திரன் தம்பதியினரின் மகள் ஆர். பவித்ரா விருதுக்கு தேர்ந்தெடுக்கபட்டார்.  இவர் புன்செய் புளியம்பட்டி எஸ்.ஆர்.சி. மெட்ரிக் பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயில்கிறார். 8 ஆம் வகுப்பு பிரிவில் தமிழகதில் இருந்து மாணவி ஆர்.பவித்ரா மட்டுமே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிப்ரவரி 17 இல் அகமதாபாத் ஐ. ஐ. எம். மையத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் தேசிய அறிவியல் விருதினை வழங்கி கௌரவித்தார்

மாணவியின் கண்டுபிடிப்பு:
********************************
         ஸ்லைடிங் அரெஸ்ட்டர் மெக்கானிசம் என்ற இவரது கருவியானது மலைப்பாதைகளில் கனரக வாகனங்கள் மேல்நோக்கி போகும்போது ஓட்டுனர் ப்ரேகை அழுத்தியும் வண்டி நிற்காமல் அதிக எடையின் காரணமாக வாகனம் பின்னோக்கி நகர்வதை தடுத்து நிறுத்தும் வகையில் ஒருவித ப்ரேகை வடிவமைத்துள்ளார். இவரின் இந்த வடிவமைப்பு தேசிய அறிவியல் தொழில்நுட்ப கழகத்தால் ஏற்றுகொள்ளபட்டு அதற்கான காப்புரிமையும் வழங்கப்பட்டது.

       தேசிய அறிவியல் விருது வென்ற சாதனை மாணவி ஆர்.பவித்ராவுக்கு எஸ்.ஆர்.சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ஆர். பழனிசாமி, முதல்வர் திருமூர்த்தி, ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள், விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் மற்றும் விடியல் உறுப்பினர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். 

0 comments:

Post a Comment