தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, February 8, 2014

புன்செய் புளியம்பட்டியில் மாவட்ட அளவிலான செஸ், கேரம், கராத்தே போட்டிகள்
***********************************************************************************

 புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான செஸ், கேரம், கராத்தே போட்டிகள் வருகின்ற  16-02-2014 ஞாயிற்றுகிழமை காலை 9 மணியளவில் புன்செய் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் (உதவி தொடக்க கல்வி அலுவலக வளாகம்) நடைபெறுகிறது.
 
Add caption
இது குறித்து விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் கூறி இருப்பதாவது,  புன்செய் புளியம்பட்டியில் முதன்முறையாக மாவட்ட அளவிலான செஸ், கேரம், கராத்தே போட்டிகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு போட்டியும் இளையோர் பிரிவு (12 வயதுக்கு உட்பட்டோர்), மூத்தோர் பிரிவு (14 வயதுக்கு உட்பட்டோர்), மிக மூத்தோர் பிரிவு (17 வயதுக்கு உட்பட்டோர்) என 3 பிரிவுகளாக நடத்தபடுகிறது. 3 போட்டிகளிலும் 3 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ளலாம். ஆண்கள், பெண்களுக்கு போட்டிகள் தனித்தனியாக நடத்தப்படும்.

 
ஒரே மாணவர் ஒன்றுக்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொள்ளலாம். செஸ் மற்றும் காரத்தே போட்டிக்கு தனித்தனியே நுழைவு கட்டணம் ரூபாய் 100 செலுத்த வேண்டும். கேரம் போட்டி ஒற்றையர் பிரிவுக்கு ரூபாய் 100, இரட்டையர் பிரிவுக்கு ரூபாய் 200 கட்டணம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு  பிரிவிலும் முதல் 3 இடங்களை பெரும் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே பரிசு கோப்பைகள் வழங்கப்படும். சிறப்பு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதல்கள் வழங்கப்படும்.

 
போட்டிக்கான விண்ணப்பபடிவங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்ப பட்டுள்ளது. நேரடியாக போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவ மாணவியர்கள்  விடியல் கம்ப்யூட்டர் எஜுகேசன், மாதம்பாளையம் ரோடு, புன்செய் புளியம்பட்டி என்ற  முகவரியில் ரூபாய் 100 நுழைவு கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். பெயர் பதிவு மற்றும் விண்ணபங்களை பூர்த்தி செய்து வழங்க கடைசி நாள் 15-02-2014. மேலும் விபரங்களுக்கு 98427 80240 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment