தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, February 22, 2014

பவானிசாகரில் 2709 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள்.

 

பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் ஊராட்சியில் 2709 பயனாளிகளுக்கு இலவச மிக்ஸி, கிரைண்டர் மின்விசிறிகள் வழங்கப்பட்டது.  பவானிசாகர் ஒன்றியம், தொப்பம்பாளையம் ஊராட்சி,  தொட்டம்பாளையம் மாகாளிஅம்மன் கோயில் திடலில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சண்முகம் தலைமை தாங்கினார். சத்தியமங்கலம் வட்டாட்சியர் முத்துராமலிங்கம் வரவேற்றார். பவானிசாகர் ஒன்றியக்குழு தலைவர் பழனிச்சாமி  முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம், பவானிசாகர் எம்எல்ஏ சுந்தரம் ஆகியோர் பங்கேற்று  2709 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கினர். முடிவில்  ஒன்றியக்குழு துணைத்தலைவர் வேலுமணி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிலவருவாய் ஆய்வாளர் தங்கராஜ், விஏஓ மோகன் செய்திருந்தனர்.

0 comments:

Post a Comment