தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, February 6, 2014

புன்செய் புளியம்பட்டியில் பாறுகழுகு பாதுகாப்பை வலியுறுத்தி மனிதசங்கிலி

புன்செய் புளியம்பட்டியில் பாறுகழுகு பாதுகாப்பை வலியுறுத்தி மனிதசங்கிலி



கால்நடைகளுக்கு தடை செய்யப்பட்ட டைகளோபினாக் மருந்தை பயன்படுத்துவதை தடுக்க கோரியும் பாறுகழுகு பாதுகாப்பை வலியுறித்தியும் விழிப்புணர்வு மனித சங்கிலி பிரச்சாரம் புன்செய் புளியம்பட்டி சந்தைக்கடை  முன்பு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம் தலைமை தாங்கினார். புளியம்பட்டி நகராட்சி தலைவர் பி.எஸ்.அன்பு, பவானிசாகர் ஒன்றியகுழு தலைவர் வி.ஏ. பழனிசாமி,நகரமன்ற உறுப்பினர் பி.ஏ. சிதம்பரம் , டாக்டர் எம்.சுப்ரமணியம், நகரமன்ற துணை தலைவர் டி.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மனித சங்கிலி விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.

 
பாறுகழுகுகள்
அருளகம் கழுகு ஆராய்ச்சியாளர் வெங்கடாசலம் பேசும் பொது பாறுகழுகுகள் எனப்படும் பிணந்தின்னி கழுகுகள் இறந்த விலங்குகளை மட்டும் தின்று நமக்கும் காட்டில் உள்ள பிற விலங்குகளுக்கும் நோய்நொடி பரவாமல் காத்து வருகின்றன. இந்த இன கழுகுகள் தற்போது மிகவும் குறைந்து வருவதற்கு நாம் மாட்டுக்கு பயன்படுத்தும் டைகளோபினாக் மருந்து தான் காரணம். இம்மருந்தின் எச்சம் இறந்த மாட்டை உண்ணும் இக்கழுகுகளை பாதித்ததால் இவைகள் கூட்டம் கூட்டமாக மடிந்தன. இந்த மருந்தினை அரசாங்கம் 2006 ஆம் ஆண்டே கால்நடைகளுக்கு பயன்படுத்துவதற்கு தடை செய்தது. அதன்படி இம்மருந்தை விற்பதும், வாங்குவதும் குற்றமாகும். இதற்கு சிறைத்தண்டனையுடன் கூடிய அபராதம் உண்டு. ஆனால் இம்மருந்தை போதிய விழிப்புணர்வு இன்றி இன்னமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இம்மருந்தை அறவே புறகணித்தால் தான் இருக்கும் கழுகுகளையாவது காப்பாற்ற முடியும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் செந்திவேல், சத்தியமங்கலம் ரோட்டரி சங்க தலைவர் ஸ்ரீராம், விடியல் சமூகநல செயலாளர் எஸ். ஜெயகாந்தன், கோவை அக்னி அரிமா சங்க தலைவர் செந்தில்குமரன், செயலாளர்  மோகன்ராஜ், முடுகன்துறை கூட்டுறவு சங்க செயலாளர் கே.அன்பரசு, நகரமன்ற உறுப்பினர்கள் முகமது உசேன், நாகராஜ் மற்றும் நகர அண்ணா தி.மு.க அவைத்தலைவர் ஜெயசேகர், அண்ணா தி.மு.க பிரமுகர் ராமசாமி  உள்பட பலர் பங்கேற்றனர். அருளகம் பரமன் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருளகம் கழுகு பாதுகாப்பு குழுவை சேர்ந்த பாரதிதாசன், முருகேசன், கல்யாணசுந்தரம், ரேவதி ஆகியோர் செய்து இருந்தனர்.

0 comments:

Post a Comment