தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, February 2, 2014

புன்செய் புளியம்பட்டியில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி

    
புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் மற்றும் அம்மா மெட்ரிக் பள்ளி சார்பில் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆலோசனை நிகழ்ச்சியில் தேர்வு ஆலோசனை கையேட்டினை விடியல் செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் மாணவியர்களுக்கு வழங்கினார். அருகில் முனைவர் வில்லவன், ஞானதண்டபாணி, தருமராசு மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர்.

      புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் மற்றும் அம்மா மெட்ரிக் பள்ளி  சார்பில் 10 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது

     விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றார். சுப்ரமணியர் திருக்கோவில் அறங்காவலர் ஞானதண்டபாணி தலைமை  வகித்தார். கவுந்தபாடி அரசு மகளிர் பள்ளி ஆசிரியர் முனைவர் வில்லவன் தன்னம்பிக்கை குறித்து உரையாற்றினார்.

     10 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முக்கியத்துவம் தரவேண்டிய பகுதிகள் எவை? எப்படி படித்தால் 100 இக்கு 100 மதிப்பெண்கள் பெறலாம்? 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சிறப்பாக எழுதுவது எப்படி?  தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் படிக்க வேண்டிய முக்கிய பகுதிகள் குறித்து பாடவாரியாக ஆசிரியர்கள் விளக்கினார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு அனைத்து பாடங்களுக்குமான வினாவங்கி புத்தகம், தேர்வு ஆலோசனை கையேடு புத்தகம், குறிப்பேடு, பேனா ஆகியவை இலவசமாக வழங்கபட்டன.
       

விடியல் வழிகாட்டி நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள்
    இந்நிகழ்ச்சியில் புன்செய் புளியம்பட்டி, நல்லூர், காவிலிபாளையம், தொட்டம்பாளையம், புங்கம்பாளையம், பெத்திகுட்டை, வாலிபாளையம், உத்தண்டியூர், பட்டிமணியன்காரன்பாளையம், செம்மம்பாளையம், வேமாண்டம்பாளையம், பவானிசாகர் உள்பட 20 இகும் மேற்பட்ட உயர்நிலை பள்ளிகளை சேர்ந்த  1000 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.

       இந்நிழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விடியல் தலைவர் வாணி தருமராசு, செயலாளர் எஸ்.ஜெயகாந்தன், உறுப்பினர்கள் லோகநாதன், வடிவேலன், சக்திவேல், ரமேஷ்குமார், சுபாசந்தர், சிவகுமார், கலைச்செல்வி மற்றும் பலர் செய்து இருந்தனர்.

0 comments:

Post a Comment