தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, February 13, 2014

தமிழக பட்ஜெட்: 35 லட்சம் குடும்பத்துக்கு ஃபேன், மிக்சி, கிரைண்டர்கள்- 100 அம்மா மருந்தகங்கள்.!

 
 
சென்னை: தமிழக அரசின் பட்ஜெட்டில் நடப்பாண்டில் 35 லட்சம் குடும்பத்துக்கு ஃபேன், மிக்சி, கிரைண்டர்கள் வழங்கப்படும், 100 அம்மா மருந்தகங்கள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
 அதிமுக அரசின் 4வது பட்ஜெட்டை இன்று முற்பகல் சட்டசபையில் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அவரது பட்ஜெட் உரையில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள்:

35 லட்சம் குடும்பத்துக்கு ஃபேன், மிக்சி, கிரைண்டர்கள் வழங்கப்படும். 100 அம்மா மருந்தகங்கள் கூட்டுறவுத் துறை சார்பில் தொடங்கப்படும். 
 2013-14ல் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 5%க்கு கூடுதலாக இருக்கும். 2014-15ஆம் ஆண்டுக்கான திட்ட ஒதுக்கீடு ரூ 42,185 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது கிராமப்புற ஏழை மக்களுக்கு நிலையான வாழ்வாதாரம் அளிக்கும் புதுவாழ்வு திட்டத்துக்கு ரூ49.05 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை கட்டிடங்கள் கட்ட ரூ571.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் 24, 503 காவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல் காவல்துறைக்கு ரூ5186.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும் சிறைச்சாலை துறைக்கு ரூ 194.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலை கட்டமைப்புக்கு ரூ2,800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 
 
மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் தஞ்சாவூர் மல்லிப்பட்டினத்தில் ரூ60 கோடியில் மீன்பிடி துறைமுகம் மேம்படுத்தப்படுகிறது. நடப்பாண்டில் 60 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டப்படும். இந்த 60 ஆயிரம் பசுமைவீடுகள் கட்ட ரூ1260 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ100கோடி செலவில் 118 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும். அரசு கட்டணங்களை ஒரே இடத்தில் செலுத்த பொதுச்சேவை மையங்கள் உருவாக்கப்படும். மேலும் குடிநீர் தட்டுப்பாடு, கால்நடை தீவன தட்டுப்பாட்டை போக்க ரூ681 கோடி நிவாரண தொகுப்பு உருவாக்கப்படும். ரூ50 கோடி செலவில் தமிழ்நாடு பருத்தி சாகுபடி அதிகரிக்க புதிய இயக்கம் செயல்படுத்தப்படும். சென்னையில் அக்டோபரில் சர்வதேச தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் விரிவாக்கப்படும். பாசனப் பணிகளுக்கு ரூ100 கோடி நிதி ஒதுக்கீடு, நீர்ப்பாசனதுறைக்கு ரூ3669.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வி.ஏ.ஓக்களுக்கு லேப்டாப் 4887 வி.ஏ.ஓக்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். 12799 மெகாவாட் உச்சதேவையை தமிழக அரசு பூர்த்தி செய்துள்ளது மிகப் பெரும் சாதனை படைத்துள்ளது. தமிழகத்துக்கு கூடுதலாக 3330 மெகாவாட் மின்சாரத்தைப் பெற ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மின்வாரிய கடன் பொறுப்பில் ரூ2ஆயிரம் கோடியை மாநில அரசு ஏற்கும் 1000 புதிய பேருந்துகள் ரூ200 கோடியில் 1000 புதிய பேருந்துகள் வாங்கப்படும். சென்னை மோனோ ரயில் திட்டத்துக்கு ரூ200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஜிபிஎஸ் வசதியுடன் ஒருங்கிணைந்த பேருந்து தகவல் அமைப்பு உருவாக்கப்படும். இதன் மூலம் அனைத்து சென்னை மாநகர பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படுகிறது. அக்டோபரில் சர்வதேச தொழில் முதலீட்டாளர் மாநாடு தொழில்துறையில் மொத்தம் ரூ26,625 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. சென்னையில் அக்டோபரில் சர்வதேச தொழில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக ரூ100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் தலைமுறை தொழில் முனைவோரை உருவாக்க ரூ100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டுக்கு ரூ750 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தஞ்சாவூர், திருநெல்வேலியில் பன்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்படும். 5.5 லட்சம் மாணவர்களுக்கு ;இலவச லேப்டாப் வழங்க ரூ1,100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். முதல் தலைமுறை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் திருப்பி வழங்கப்படுகிறது. இந்த கல்வி கட்டணம் திருப்பி வழங்கும் திட்டத்துக்கு ரூ585.17 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நடப்பாண்டில் கூடுதலாக 14 பெண்கள் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment