தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, July 11, 2014

சத்தியமங்கலம் நகராட்சிக்கு புதிய சின்னம் உதயம் 

 
 

சத்தியமங்கலம், ஜூலை 1: சத்தியமங்கலம் நகராட்சிக்கு அடையாளமாக புதிய சின்னம் பொறிக்கப்பட்டு, சத்தியில் திங்கள்கிழமை நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.

சத்தியமங்கலம் நகராட்சி தொடங்கப்பட்ட நாளிலிருந்து இதுவரையிலும் நகராட்சிக்கு சின்னம் எதுவும் பொறிக்கப்படவில்லை. தற்போது, சத்தியமங்கலம் நகராட்சிக்கு அடையாளச் சின்னமாக புதிய சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. 

சின்னத்தின் தலைப்பு பகுதியில் இரண்டு புலிகள் உள்ளது போன்றும், நடுவில் பவானிசாகர் அணையின் முகப்பு தோற்றமும்,  பக்கவாட்டில் யானையின் உருவமும் பொறிக்கப்பட்டு அதன் கீழ் தூய்மை, வாய்மை, பெருமை என்ற வாசகங்கள் அடங்கியுள்ள சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சின்னத்தில் பொறிக்கப்பட்ட படங்கள் பற்றிய சிறப்புகளை நகராட்சி தெரிவித்துள்ளது.

சின்னத்தின் மத்தியில் சத்தியமங்கலம் நகராட்சி என்றும் இந் நகராட்சிக்கு அடுத்து புலிகள் காப்பகம் அமைந்திருப்பதால் புலிகளின் படமும் சத்தியமங்கலத்துக்கு முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளதால் அதன் முகப்பு படமும் சத்தி வனப்பகுதி யானைகளின் வழித்தடமாக உள்ளதால் யானைகள் படமும் இங்கு அதிக சந்தனமரங்கள் வளருவதால் இதனை  சந்தன நகரம் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. நகராட்சியில் தூய்மை, வாய்மை மற்றும் பெருமை என வாசங்களும் சின்னத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

சத்தி நகராட்சி சின்னத்தை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தும் விழா மற்றும் நகர்மன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் கே.சரவணக்குமார் முன்னிலை வகித்தார். சத்தி நகர்மன்றத்தலைவர் புதிய சின்னத்தை அறிமுகப்படுத்தினார்.இதில் நகராட்சி துணைத் தலைவி என்.திலகவதி நடராஜ் மற்றும்  நகர்மன்ற உறுப்பினர் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment