தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, July 11, 2014

உயிரிழந்த குட்டியின் அருகே இரு நாள்களாக காத்திருந்த தாய் யானை

 
பவானி, ஜூலை. 1:

பவானியை அடுத்த பர்கூர் வனப்பகுதியில் பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த குட்டியின் அருகே இரு நாள்களாக தாய் யானை காத்திருந்தது. வனத்துறையினர் மலைமக்கள் உதவியுடன் யானையை விரட்டிவிட்டு பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர்.

அந்தியூர் வனப்பகுதி தாமரைக்கரை அருகே மணியாச்சி பள்ளம் பகுதியில் காட்டாறு ஓடுகிறது. இந்த காட்டாற்றை ஒட்டியுள்ள தம்மிரெட்டி எனும் இடத்தில் தண்ணீர் குடிக்க வந்த சுமார் 2 வயதுள்ள ஆண் குட்டியானை தவறி விழுந்து உயிரிழந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

இதுகுறித்து, தகவலறிந்த அந்தியூர் வனவர் ராஜமாணிக்கம் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றபோது உயிரிழந்த குட்டியானையை சுற்றிலும் 10–க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக நின்றிருந்தன. இதனால், சம்பவ இடத்துக்கு யாரும் செல்ல முடியவில்லை.

சுற்றி நின்ற யானைகள் உயிரிழந்த குட்டி யானையைப் பிடித்து இழுப்பதும், அசைவுகள் இல்லாததால் சோகமாக நிற்பதுமாக இருந்தது. அவ்வப்போது மழை பெய்து வந்ததாலும் யானைகளை விரட்டுவது கடினமாக இருந்தது. இந்நிலையில், கூட்டமாக நின்ற யானைகளை கடும் போராட்டத்துக்குப் பின்னர் வனத்துறையினர் செவ்வாய்க்கிழமை பட்டாசுகளை தொடர்ந்து வெடிக்கச் செய்து விரட்டினர்.

இருந்தபோதிலும் தாய் யானை மட்டும், உயிரிழந்த குட்டி யானைக்கு அருகே நெருங்க விடாமல் கடும் எதிர்ப்பைக் காட்டியது. மரங்களின் கிளைகளை உடைத்துப் போட்டதோடு பட்டாசு வெடிச் சத்ததுக்கும் அசராமல் நின்றதோடு, வெளியேற மறுத்தது. நீண்ட போராட்டத்துக்கு பின் தாய் யானையை விரட்டிய வனத்துறையினர் கால்நடை மருத்துவர் பூவிழிராஜன் தலைமையில் குட்டியானையை பரிசோதனை செய்து சம்பவ இடத்திலேயே புதைத்தனர்.

அனைவரும் திரும்பிய பின்னர் குட்டியானை கிடந்த அதே இடத்தில் மீண்டும் தாய் யானை வந்து காத்துக் கொண்டுள்ளது. யானை பலத்தில் மட்டுமல்ல, பாசத்திலும் வலிமையானது என்பது சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், பொதுமக்களுக்கு வேதனையையும், வியப்பையும் ஏற்படுத்தியது.

0 comments:

Post a Comment