தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, July 11, 2014

சத்தியமங்கலம் ஸ்ரீ லஷ்மி நாராயணர் கோவில்,ஸ்ரீ கோட்டை முனியப்பன் கோவில் ஆகியவற்றின் மஹா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

 
 

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ லஷ்மி நாராயணர் கோவிலில் கட்டடங்கள் மற்றும் கோபுரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு ரூ.30 லட்சம் செலவில் திருப்பணிகள் நடைபெறுள்ளன. இக் கோவில்
கோவில் கும்பாபிஷேக விழா ஜூலை 2ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து, பவானி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்து வந்தனர். இரவு 7 மணியளவில் முதற்கால ஹோமம் நடைபெற்றது.வியாழக்கிழமை காலை இரண்டாம் கால பூஜையும் இரவு மூன்றாம் கால பூஜையும் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை காலை மங்கள இசை, திவ்யபிரபந்தத்துடன் நான்காம் கால ஹோமமும் நடைபெற்றது காலை 7.30 மணிக்கு  கலசம் புறப்பாடு, ஸ்ரீ லஷ்மி நாராயணார், விமானம் மற்றும் பரிவார விமானத்திற்கு ஏககால கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, கர்நாடகத்தின் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகாசமஸ்தான மடம் மகாபீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ நிர்மலானந்த நாத மகா சுவாமிஜி கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றினார்.விஜயலட்சுமி அறக்கட்டளைத் தலைவர் ஓ.ஆறுமுகசாமி, பண்ணாரிஅம்மன் குழுமத்தின் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், சத்தி நகர்மன்ற தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

அதனைத் தொடர்ந்து, கோவிலில்  நடைபெற்ற மஹா அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவையொட்டி, அன்னதானம் வழங்கப்பட்டது. 


சத்தியமங்கலம் ஸ்ரீ கோட்டை முனியப்பன் கோவிலில் உள்ள ஸ்ரீ கோட்டை விநாயகர்,கோட்டை கன்னிமார்,கோட்டை கருப்பராயர், கோட்டை ஐய்யனார் மற்றும் கோட்டை நாகராஜர் சுவாமி சன்னதிகள் ஆகிவற்றின் திருப்பணிகள்  ரூ.25 லட்சம் செலவில் நடைபெற்றுள்ளன  வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்ற விழாவில் கோபுர கலசத்துக்கு ஸ்ரீலஸ்ரீ ச.நடராச சுவாமி புனித ஊற்றி கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment