தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, July 12, 2014

காரமடை ஊராட்சி ஒன்றியம் சார்பில் திறந்த வெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்து ஏற்படும் விபத்து குறித்து விழிப்புணர்வு பேரணி

 


காரமடை.ஜூலை,9. கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அர்ச்சனா பட்நாயக் உத்தரவின் பேரில் கிராம ஊராட்சிகளில் அமைந்துள்ள திறந்தவெளி கிணறுகள்,பயனற்ற ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுவதால் ஏற்படும் விபத்து,மற்றும் உயிரிழப்புகளை தடுக்க விழிப்புணர்வு பேரணி காரமடை ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் இன்று நடந்தது.நிகழ்ச்சிக்கு காரமடை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எம்.எஸ்.ராஜகுமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராணி,லலிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ.சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழிப்புணர்வு பேரணியை துவக்கிவைத்து சிறப்புரை ஆற்றினார். பேரணியில் காரமடை ஒன்றியகுழு துணைத்தலைவர் ஆர்.செல்வராஜ்,மாவட்ட குழு உறுப்பினர்  பி.டி.சிவசாமி,மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள்,. காரமடை ஒன்றியத்தை  சேர்ந்த 17 கிராம ஊராட்சிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள்,கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி ஒன்றியஅலுவலர்கள், அலுவலக பணியாளர்கள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்ஊராட்சி ஒன்றிய அலுவகலகத்தில் துவங்கிய .பேரணிகோவை ரோடு,காரமடை அரங்கநாதர் கோவில், வழியாக மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அடைந்தது. முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்[நிர்வாகம்]பி.ரவீந்திரன் நன்றி கூறினார்.


0 comments:

Post a Comment