தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, July 11, 2014

புன்செய் புளியம்பட்டியில்ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் அம்மா உணவக கட்டுமான பணி. அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.

 

 
புன்செய் புளியம்பட்டி;ஜூன்;30;

புன்செய் புளியம்பட்டியில் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில்  அம்மா உணவக கட்டுமான பணியை சுற்றுச்சுழல் துறை 
அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் 360 புதிய அம்மா உணவகங்கள் திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு இருந்தார். 
அதன்படி,124 நகராட்சிகளில் அம்மா உணவகங்கள் திறக்கப்படுகிறது.
மலிவு விலையில் தரமான உணவினை ஏழை எளிய மக்கள் வயிறார உண்ணும் வகையில்,
 அம்மா உணவகங்களில் உணவு வழங்கப்படுகிறது. இதற்கு ஏழை, எளிய மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள், அன்றாட கூலி வேலை புரிபவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
விலைவாசி உயர்விலிருந்து ஏழை, எளிய மக்களைப் பாதுகாக்கும் இந்த அம்மா உணவகங்கள் குறித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது.

இந்நிலையில்,ஈரோடு மாவட்டம்,புன்செய் புளியம்பட்டியில் அம்மா உணவக கட்டுமான பணியின் பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் கே.செந்திவேல் தலைமை வகித்தார்.மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் எஸ்.ஆர்.செல்வம்,பவானிசாகர் எம்.எல்.ஏ.சுந்தரம்,மாவட்ட வருவாய் அதிகாரி சதீஷ்,பவானிசாகர் ஒன்றியகுழு தலைவர் வி.ஏ.பழனிசாமி,நகராட்சி தலைவர் பி.எஸ்.அன்பு,நகராட்சி துணைத்தலைவர் தி.பாபு,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழக சுற்றுச்சுழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அம்மா உணவக கட்டுமான பணியை துவக்கி வைத்தார் .அம்மா உணவகத்தில் நவீன உணவக கட்டிடம்,சமையலறை கூடம், உணவருந்தும் கூடம்,மற்றும் பொருட்கள் உள்ளிட்டவை ரூ.37 லட்சம் மதிப்பீட்டில்,30 நாட்களில் அமைய உள்ளன.

இந்நிகழ்ச்சியில் நகர அ.தி.மு.க.செயலாளர் எம்.கே.ராஜேந்திரன்,நகர அவைத்தலைவர் ஜெயசேகர்,நகர அம்மா பேரவை செயலர் ராமசாமி, இளைஞர் அணிசெயலாளர் சக்திசண்முகம்,அம்மா பேரவை தலைவர் மயில்சாமி, தொழிற்சங்க செயலர் மூர்த்தி, நகர துணை செயலர் நாகராஜ், நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பி.ஏ .பாலன் , மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் நாகராஜ்,ஜக்கிரியா,கீதா,நகராட்சி பொறியாளர் லலிதாமணி சுகாதார ஆய்வாளர் வீரபாகு,மற்றும் நகராட்சி  அலுவலர்கள்   கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment