தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, July 12, 2014

ரேசன்கடையில் காலவதியான பொருட்கள் விற்பனை. பொருட்களை பறிமுதல் செய்து சத்தியமங்கலம் நகராட்சி அதிரடி

 
சத்தியமங்கலம், ஜூலை.12. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட ரேசன்கடைகளில் காலவதியான பொருட்கள் விற்கப்படுவதாக நுகர்வோர் சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளர் சரவணக்குமாரிடம் புகார் அளித்தனர். இப்புகாரின் அடிப்படையில் ஆணையாளரின் உத்தரவின்பேரில் நகராட்சி சுகாதார அலுவலர் சக்திவேல் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் நகராட்சி எல்லைக்குட்பட்ட ரேசன்கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கடைகளில் காலாவதியான சீரகம், மிளகு, கடுகு, சோம்பு பாக்கெட்டுகள் நுகர்வோரிடம் விற்றபோது நகராட்சி அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில் ரேசன்பொருட்கள் வாங்கும் பொதுமக்களிடம் மீதி சில்லரை வழங்குவதற்கு பதிலாக கட்டாயப்படுத்தி காலாவதியான ரூ.2 மதிப்புள்ள 100 க்கும் மேற்பட்ட பாக்கெட்டுகளை விற்றதும், இப்பொருட்கள் பொதுவிநியோகத்திட்டத்தில் விற்க அனுமதியில்லாத  தனியார் நிறுவன தயாரிப்புகள் என்பது தெரிய வந்தது. நகராட்சி நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையால் சில ரேசன்கடை ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு ஓட்டம் பிடித்தனர். பறிமுதல் செய்த காலாவதியான பொருட்களை அதிகாரிகள் நகராட்சி ஆணையாளரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து நகராட்சி ஆணையாளர் கூறியதாவது. காலவாதியான பொருட்களை விற்பவர்கள் மீது பாரபட்சமின்றி சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதேபோல் தனியார் கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டு ரூ.10000 மதிப்புள்ள காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரேசன்கடைகளிலேயே காலாவதியான பொருட்கள் விற்கப்பட்டதை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். 

0 comments:

Post a Comment