தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, July 11, 2014

விவசாயிகளுக்கு அறுவடை பின் செய் நேர்த்தி தொழில்நுட்ப பயிற்சி


சத்தியமங்கலம்,

சத்தியில் நடைபெற்ற அறுவடை பின் செய் நேர்த்தி தொழில்நுட்ப பயிற்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப்பயிற்சி முகாமுக்கு விற்பனை வாரிய உதவி இயக்குநர் வி.குணசேகரன் தலைமை வகித்து பேசுகையில், தென்னை,மக்காச்சோளம், நெல்,மஞ்சள் மற்றும் நிலக்கடலை போன்ற பயிர்களில் அறுவடையின்போதும் அதன் பின்னரும் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். மேலும் அவர், ஈரப்பதங்கள்,தரம் பார்த்தல், கல், மண்,சருகு,செதில் மற்றும் பூச்சி நோய் தாக்கியவை மற்றும் உடைத்தவை ஆகியவற்றை நீக்கி சுத்தமாக தரம் பிரித்து மதிப்பு கூட்டல் பொருள்களாக மாற்றுவதன் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றார்.

உழவர் சந்தை நிர்வாக அலுவலர் எஸ்.ஆர்.லஷ்சுமி நாராயணன் பேசுகையில் பயிர்க்குழு அமைத்தல், புரிந்துணர்வு ஒப்பந்தம் புரிதல்,ஊரக வணிக மையத்தின் மூலம் விற்பனை வாய்ப்புகள் மற்றும் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பயன்பாடுகள் மற்றும் குளிர்பதன சேமிப்பு கிடங்கு பற்றி கூறினார்.

இதில் வேளாண்மை அலுவலர் சிவபிரகாஷ்,துணை வேளாண் அலுவலர் கலைச்செல்வன், உதவி வேளாண் அலுவலர்கள் சி.ராஜ்குமார்,டி.தமிழ்ச்செல்
வன், டி.செந்தில்குமார் மற்றும் ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் வி.சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment