தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, November 15, 2013

பண்ணாரி சோதனைச்சாவடியில் கால்நடைகள் கண்காணிப்பு
******************************



சத்தியமங்கலம், நவ.16.
ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்
தாக்கியதையடுத்து அண்டை மாநிலங்களிலிருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படும் கால்நடைகளை கண்காணிக்கும் பொருட்டு பண்ணாரி சோதனைச்சாவடியில் கால்நடைத்துறையினர் தணிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு மாதகாலமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த கால்நடை பராமரிப்புத்துறையினர் தடுப்பூசி போட்டு வருகின்றனர். வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து மாட்டுச்சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் கால்நடைகள் மூலம் நோய் பரவ வாய்ப்புள்ளதால் சந்தைகள் கூடுவதை தற்காலிகமாக
நிறுத்தி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து வெளிமாநிலங்களிலிருந்து வாகனங்களில் நோய் தாக்கிய மாடுகள் கொண்டுவருவதை சோதனைச்சாவடி அமைத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டதை தொடர்ந்து கோபி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் பழனிச்சாமி அறிவுரையின் பேரில் பண்ணாரியில் உள்ள கால்நடைபராமரிப்புத்துறையின் பறவைக்காய்ச்சல் தடுப்பு சோதனைச்சாவடியில் 24 மணி நேரமும் நால்நடைத்துறை அதிகாரிகள் வெளிமாநிலங்களிலிருந்து நோய் தாக்கிய மாடுகள் கொண்டுவரப்படுகிறதா என கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து ராஜன்நகர் கால்நடை மருத்துவர் தங்கவேல் கூறியதாவது.
வெளிமாநிலத்திலிருந்து லாரிகளில் விற்பனைக்கு கொண்டுவரப்படும்
கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட சான்றிதழ் உள்ளதா எனவும்,
சான்றிதழுடன் கொண்டுவரப்படும் கால்நடைகள் ஆரோக்கிமாக உள்ளதா எனவும் பரிசோதிக்கப்படுகிறது. நோய்தாக்கிய மற்றும் சான்றிதழ் இல்லாமல்
கொண்டுவரப்படும் வாகனங்களை அனுமதிக்காமல் திருப்பியனுப்படுகிறது என்றார்.

0 comments:

Post a Comment