தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, November 15, 2013

புன்செய் புளியம்பட்டியில் 1 கோடி மதிப்புள்ள 529
விலையில்லா மடிக்கணினி
கள் வழங்கும் விழா!
************************************************************
          சத்தியமங்கலம் நவம்பர் 14: சத்தியமங்கலம் அருகே புன்செய் புளியம்பட்டி கெ.ஒ.ம. அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.


       இந்நிகழ்ச்சிக்கு கெ.ஒ.ம. அரசு மகளிர் மேல்நிலை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் லிங்கப்ப கவுண்டர் தலைமை தாங்கினார். கெ.ஒ.ம.அரசு மகளிர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கே.ஒதியப்பன் வரவேற்புரை ஆற்றினார். பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வி.ஏ. பழனிசாமி, நகர அண்ணா தி.மு.கழக செயலாளர் எம்.கே.ராஜேந்திரன், நகரமன்ற துணை தலைவர் டி.பாபு, இந்திய கம்யூனிஸ்ட் பவானிசாகர் ஒன்றிய செயலாளர் பி.என்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
        ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடி கணினிகளை  வழங்கி சிறப்புரை ஆற்றினர். இந்நிகழ்ச்சியில் புன்செய் புளியம்பட்டி கே.வி.கே. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 195 மாணவர்களுக்கும், கே.ஒ.ம. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 277 மாணவிகளுக்கும், பனையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 57 மாணவ மாணவியர்களுக்கும் மொத்தம் 1 கோடி மதிப்புள்ள 529 விலையில்லா மடிகணினிகள் வழங்கப்பட்டது.
        
இந்நிகழ்ச்சியில் பனையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அ.தேவேந்திரன்,  பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கே.குருசாமி, பனையம்பள்ளி ஊராட்சி தலைவர் ஈஸ்வரன், வீடு வசதி சங்க தலைவர் தாமோதரன், அம்மா பேரவை செயலர் ராமசாமி, தொழில்சங்க செயலர் மூர்த்தி, நகர துணை செயலர் நாகராஜ், நகரமன்ற உறுப்பினர்கள் முகமது ஜக்கரியா,  சுப்ரமணியன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உள்பட பலர் பங்கு கொண்டனர். நிறைவாக கே.வி.கே.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கே.துரைசாமி நன்றி கூறினார்.

0 comments:

Post a Comment