தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, November 25, 2013

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 5,600 கனஅடியாக அதிகரிப்பு!
************************************************************




கேரள வனப்பகுதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 5,600 கனஅடியாக அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. இதன் நீர்மட்டக் கொள்ளளவு 120 அடி. இதில் 15 அடி சேறும் சகதியுமாக உள்ளது. அணை மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த சில மாதங்களாக மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில்  மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து நாள்தோறும் சராசரியாக 2,000 கனஅடிக்கு குறைவாக இருந்தது. இதனால், நீர்வரத்துக்கு ஏற்ப, அணையில் இருந்து பவானி ஆறு மற்றும் கால்வாய்க்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருவதாலும், மின்உற்பத்திக்காக பில்லூர் அணையில் தண்ணீர் திறந்து விடப்படுவதாலும், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 67 அடியாகவும் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,600 கனஅடியாகவும் உள்ளது. அணையில் இருந்துவிநாடிக்கு, ஆற்றில் 400 கனஅடியும் கால்வாயில் 1900 கனஅடி நீரும் திறந்துவிடப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, தெங்குமரஹாடா மற்றும் பவானிசாகர் பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர வாய்ப்புள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment