தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, November 12, 2013

இன்று உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம்!
***************************************************************************


கட்டுரையாளர்:
**********************
எஸ்.ஜெயகாந்தன், செயலாளர்,
விடியல் சமூகநல இயக்கம், புன்செய் புளியம்பட்டி


ஆண்டுதோறும் நவம்பர் 14 அன்று உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்க படுகிறது. சர்க்கரை நோயின் அறிகுறிகள், சர்க்கரை நோயினால் ஏற்படும் சிக்கல்கள், சர்க்கரை நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய உடல்பயிற்சிகள் குறித்து விளக்குகிறார் புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன்.

சர்க்கரை நோயின் அறிகுறிகள் என்ன?
  • அளவிற்கு அதிகமாக தாகம்
  • அளவிற்கு அதிகமான பசி
  • மங்கலான பார்வை
  • சோர்வு
  • அடிகடி சிறுநீர் கழிதல்
  • விவரிக்க முடியாத அளவு எடை குறைதல்

சர்க்கரை நோயினால் ஏற்படும் சிக்கல்கள்:
பெரிய இரத்த குழாய் சிக்கல்கள்:
  • இதயம் - மாரடைப்பு
  • மூளை - ஸ்ட்ரோக்
  • கால்/ பாதம் - புண்கள், காயங்கள் மெதுவாக குணமாதல்
சிறிய  இரத்த குழாய் சிக்கல்கள்:
  • கண்(விழித்திரை) - குருடு, கண்படலம்
  • சிறுநீரகம் - சிறுநீரக செயலிழப்பு
சர்க்கரை நோயாளிகள் செய்ய வேண்டிய உடல்பயிற்சிகள் எவை எவை ?
  • ஜாக்கிங்
  • நீச்சல்
  • சுறுசுறுப்பான நடைபயிற்சி
  • சைக்கிள் ஒட்டுதல்
  • படியேருதல்
  • நாற்காலியில் அமர்ந்து செய்யும் உடல்பயிற்சி
சர்க்கரை நோயாளிகள் தினசரி செய்ய வேண்டியவை என்ன?
  • உணவு கட்டுபாடுகளை கடைபிடிப்பது
  • உடல்பயிற்சி மற்றும் உடல் உழைப்பு இவற்றின் மூலம் உடலை சுறுசுறுப்பாக வைத்து கொள்ளுதல்
  • சர்க்கரை நோய்க்கான மருந்துகளை உட்கொள்வது
  • ரத்த சர்க்கரை அளவினை பரிசோதித்து கொள்வது

0 comments:

Post a Comment