தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, November 19, 2013

பவானிசாகர் அருகே வேப்பமரத்தில் பால்வடியும் அதிசயம்
**********************************************************************************

சத்தியமங்கலம், நவ 20:
பவானிசாகர் அருகே வேப்பமரத்தில் பால் வடிந்துவருவதாக வந்த தகவலையடுத்து அப்பகுதி மக்கள் அந்த வேப்பமரத்தை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

சத்தியமங்கலம் அடுத்துள்ள  அய்யன்சாலை செட்டிதோட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (40)  விவசாயி. இவரது தோட்டத்தில் உள்ள கருப்பராயன் கோயில் வளாகத்தில் கருவேம்பு, இச்சி, அத்தி மற்றும் வின்ன மரங்கள் உள்ளன. இக்கோவிலி்ல் உள்ள கருப்பராயன், கன்னிமார், முனீஸ்வரன், வீரமாத்தி, மராட்டி மற்றும்  விராடதன்னாசி சிலைகளை அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.


இந்நிலையில், இந்திராநகரை சேர்ந்த கூலித்தொழிலாளர்களாக ராஜசேகர், சின்னச்சாமி, சேகர், ரவி, அல்லிமுத்து, ராஜன், செந்தில், முருகன், அர்ஜீனன் ஆகியோர் வாழைத்தோட்டத்தில் களைவெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது வேப்பமரத்தின் உச்சியிலிருந்து பால் போன்ற திரவம் சொட்டுவதை பார்த்தனர்.

இது குறித்து தோட்டத்து உரிமையாளர் ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த கோவில் பூசாரி கருப்பஆசாரி மற்றும் ராஜேந்திரன் பால்வடியும் அதிசய வேப்பமரத்தைப் பார்த்தனர்.இது பற்றி பக்கத்து கிராமமக்களுக்கு பரவியதால் இதனை ஏராளமானோர் பார்த்துச் சென்றனர்.

இதுகுறித்து பூசாரி கருப்பஆசாரி கூறியதாவது. கோவில் வளாகத்தில் உள்ள வேப்பமரம் 200 ஆண்டு கால பழமை வாய்ந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு மரத்தை வெட்டுவதற்கு கோவிலில் வரம் கேட்டபோது சாமி உத்தரவு அளிக்கவில்லை. அதனால் மரத்தை வெட்டாமல் விட்டுவிட்டோம். மரத்தில் வடியும் பாலை எடுத்து அருந்தியதில் அது சுவையுடன் இருப்பது ஆச்சிரியமாக உள்ளது. இதையடுத்து, வேப்பமரத்துக்கு அபிஷேக பூஜை நடத்தப்படும் என்றார். 


வேப்பமரத்தில் பால்வடியும் காட்சியை சுற்றுவட்டார கிராமங்களான அய்யன்சாலை, உத்தண்டியூர், ராமாபுரம், மாரனூர், இந்திராநகர், அக்கரைதத்தப்பள்ளி, எரங்காட்டுர், சாஸ்திரிநகர், ஆலாம்பாளையம், கரிதொட்டம்பாளையம், வாய்க்கால்புதூர், மற்றும் தொட்டமப்£ளையம் கிராமமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து வருகின்றனர்.


0 comments:

Post a Comment