தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, November 28, 2013

புன்செய் புளியம்பட்டியில் 26 மாடுகள் பறிமுதல்!
**********************************************************

புன்செய் புளியம்பட்டி, நவ.29. கர்நாடக மாநிலத்திலிருந்து புன்செய் புளியம்பட்டிக்கு  மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டத்தில் பரவலாக கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவிவருவதால் கால்நடை சந்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத்திலிருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வருவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே பவானிசாகர் அருகே உள்ள நால்ரோடு அண்ணாநகர் பகுதியில் கர்நாடக மாநிலத்திலிருந்து மாடுகளை கொண்டுவந்து  விற்பனை செய்வதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மண்டல துணைவட்டாட்சியர் செல்வராஜ் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றபோது கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரை சேர்ந்த மவுலா(30), ஜன்னத்(35), அப்துல்ரஷீத்(35), பாபு(35), மாதேவா(40) ஆகிய 5 பேரும் 26 மாடுகளை புஞ்சைபுளியம்பட்டி சந்தைக்கு கொண்டு சென்றதாகவும் சந்தைக்கு
தடைவிதிக்கப்பட்டுள்ளதால் இப்பகுதியில் மாடுகளை லாரியிலிருந்து இறக்கி
வியாபாரிகளுக்கு விற்க முயற்சித்ததும் தெரிய வந்தது.  மாடுகள் பறிமுதல்
செய்யப்பட்டு பெரியகள்ளிப்பட்டி அருகே உள்ள செல்வகணேசபுரம் பிராணிகள் நலசங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாடுகளை விற்க முயற்சித்த ஐவரை வருவாய்த்துறையினர் புன்செய் புளியம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

0 comments:

Post a Comment