தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, November 12, 2013

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வாழும் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு!
*********************************************************************************************************************


சத்தியமங்கலம் நவம்பர் 12:  சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வாழும்
புலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வன உயிர் ஆர்வலர்கள்
தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனகோட்டம் பரந்து
விரிந்த மிகப்பெரிய வனப்பகுதியாகும். வனக்கோட்டத்தின் வடக்கு மற்றும்
மேற்கு பகுதியில் கர்நாடக வனப்பகுதியும், தெற்கே நீலகிரி வடக்கு
வன்கோட்டம் மற்றும் கோவை வனக்கோட்டமும் கிழக்கே ஈரோடு வனக்கோட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன. சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானை, புலி,சிறுத்தை, காட்டெருமை, மான், செந்நாய், கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன. அடர்ந்த வனப்பகுதி மற்றும் மலைப்பகுதியைஉள்ளடக்கி இருப்பதால் வனவிலங்குகள் வசிப்பதற்கேற்ற சிறந்த வனப்பகுதியாக உள்ளது. இதனால் வனவிலங்குகளின் எண்ணிக்கை குறிப்பாக புலி மற்றும் யானை போன்ற வனவிலங்குகள் அதிகரித்துள்ளது. சத்தியமங்கலம் வனக்கோட்டம் கடந்த 2008 ம் ஆண்டு வனஉயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.  பின்னர் ஆண்டுதோறும் நடைபெறும் வனவிலங்குகள் கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை
அதிகரித்ததையடுத்து தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் சத்தியமங்கலம்
வனஉயிரின சரணாலயத்தை தற்போது புலிகள் காப்பகமாக மத்திய சுற்றுச்சூழல்
மற்றும் வனத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல்
சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகள் காப்பக அறிவிப்பினை தமிழக
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமுல்படுத்தியுள்ளது. புலிகள் காப்பகம்
1408.405 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாகும்.  குறிப்பாக கெஜலட்டி,
தெங்குமரஹாடா மற்றும் தலமலை வனப்பகுதியில் புலிகள் அதிக அளவில் வசிப்பதாக கூறப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 4 புலிகள் மட்டுமே
வசித்ததாகவும், இனப்பெருக்கத்தின் காரணமாக தற்போது 30 க்கும் மேற்பட்ட
புலிகள் இருப்பதாகவும் கணக்கெடுப்புகளில் தெரிய வந்துள்ளது. புலிகளின்
எண்ணிக்கை அதிகரித்து வருவது  வனப்பகுதி வளமாகும் அறிகுறி என வனஉயிரின ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment