தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, November 25, 2013

விளைநிலங்களில் ஆலைகழிவுகளை கொட்டிய லாரி சிறைபிடிப்பு
****************************************************************************
புன்செய் புளியம்பட்டி, நவ.27.

புன்செய் புளியம்பட்டி அருகே விவசாய நிலங்களில் சர்க்கரை ஆலைக்கழிவை கொட்டிய லாரியை கிராமமக்கள் திங்கள்கிழமை சிறைபிடித்தனர்.

 சத்தியமங்கலம் அடுத்துள்ள புன்செய் புளியம்பட்டி உயிலம்பாளையம் வடக்குத்தோட்டத்தை சேர்ந்தவர் விவசாயி ராமராஜ்(51).  இவருக்கு பனையம்பள்ளி கிராமத்தில் 10 ஏக்கர் மானாவாரி நிலம் உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தனியார்  சர்க்கரை ஆலையில் இருந்து வந்த மொலாசஸ் டேங்கர் லாரி ராமராஜ் தோட்டத்தில்ஆலைக்கழிவை கொட்டிவிட்டு சென்றது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. மேலும், ரசாயனம் கலந்த கழிவால் தோட்டத்தில் வளர்ந்த புட்செடிகள் கருகி விட்டன.

இக்கிராமத்தையொட்டியுள்ள மானாவாரி நிலங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வர். தற்போது,  விவசாயிகள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லாமல் தவித்தனர். இந்நிலையில், தனியார்  சர்க்கரை ஆலையில் இருந்து திங்கள்கிழமை பனையம்பள்ளி கிராமத்துக்கு வந்த  ஒரு மொலாசஸ் லாரியை கிராமமக்கள் பிடித்து சர்க்கரை கழிவு கொட்டுவதை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த பவானிசாகர் எம்எல்ஏ  பி.எல்.சுந்தரம், கிராம நிர்வாக அலுவலர்  மோகன் ஆகியோர் லாரி டிரைவர் பாலமுருகனிடம்  விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, கிராமநிர்வாக அலுவலர் மொலாசஸ் லாரியை சத்தி வட்டாட்சியர் (பொறுப்பு) அருணாச்சலத்திடம் ஒப்படைத்தனர். 

இப்பிரச்னைக்கு தீர்வு காணப்தற்கான சமாதானக்கூட்டம் சத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் பவானிசாகர் எம்எல்ஏ பி.எல்.சுந்தரம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பண்ணாரிஅம்மன் சர்க்கரை ஆலை நிர்வாகிகள், பனையம்பள்ளி கிராமமக்கள் மற்றும்  வட்டாட்சியர்(பொறுப்பு) அருணாச்சலம் ஆகியோர் கலந்துகொண்டனர். 

எதிர்வரும் காலத்தில் விளைநிலங்களில் ஆலைக்கழிவுகளை கொட்டுவதில்லை என சர்க்கரை ஆலை நிர்வாகிகள் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர்.இதனை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டதையடுத்து ஆலைக்கு சொந்தமான மொலாசஸ் லாரியை வருவாய்த்துறையினர் விடுவித்தனர்.

0 comments:

Post a Comment