தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, November 13, 2013

பவானிசாகர் அருகே வாழைகளைச் சூறையாடிய யானைகள்

********************************************************************




சத்தியமங்கலம் நவம்பர் 13: சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் காராச்சிக்கொரை கிராமத்தில் புகுந்து 300-க்கும் மேற்பட்ட வாழைகளைச் சேதப்படுத்திய யானைகளை வனத் துறையினர் செவ்வாய்க்கிழமை விரட்டினர்.
 சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பவானிசாகர் வனப் பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் இரவு நேரத்தில் கோடேபாளையம், அம்மாபாளையம், வெள்ளாளபாளையம், நால் ரோடு, அண்ணா நகர், சொலவனூர், தொப்பம்பாளையம், கரிதொட்டம்பாளையம், புங்கார், காராச்சிக்கொரை, புதுபீர்கடவு மற்றும் பட்டரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் புகுந்து விவசாயப் பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன.
 இந் நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் 6 யானைகள், காராச்சிக்கொரை வனத்துறை சோதனைச்சாவடி அருகே உள்ள எழில் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்து அறுவடைக்குத் தயாராக இருந்த 300-க்கும் மேற்பட்ட ஆந்திர ரஸ்தாளி ரக வாழைகளைத் தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. கிராம மக்கள் மற்றும் வனத் துறையினர் யானைகளைப் பட்டாசு வெடித்தும், தீப்பந்தங்களைக் காட்டியும் வனப் பகுதிக்குள் விரட்டினர். 
 இதேபோல், கரிதொட்டம்பாளையம் விவசாயி தினேஷ்குமார் தோட்டத்தில் யானைகள் புகுந்து 100-க்கும் மேற்பட்ட வாழைகளைச் சேதப்படுத்தின. பவானிசாகர் வனப் பகுதியில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் யானைகளை, கும்கிகள் மூலமாக அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments:

Post a Comment