தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, November 28, 2013

விளைநிலங்களுக்குள் ஆடுகள் நுழைவதை தடுக்க புதுயுக்தி!
***********************************************************************************
சத்தியமங்கலம், நவ.29.
          பவானிசாகர் பகுதியில் ஆடுகள் கம்பி வேலிக்குள் புகுந்து பயிரை மேயாமல் இருக்க ஆட்டின் கழுத்தில் குச்சிகளை கட்டும் புதிய யுக்தியை ஆட்டுப்பட்டி உரிமையாளர்கள் கையாண்டு வருகின்றனர். பவானிசாகர் நகர்ப்பகுதியில் 20 க்கும் மேற்பட்டோர் வெள்ளாடு வளர்ப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.


         ஆட்டுப்பட்டி உரிமையாளர்கள்ஆடுகளை தினமும் பவானிசாகர் நகர்ப்பகுதி, பவானிசாகர் அணை மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் 4 பண்ணைகளை ஒட்டியுள்ள தரிசு நிலங்களில் மேய்ச்சலுக்கு ஓட்டி செல்கின்றனர். வேளாண்பண்ணையை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள முள்கம்பிவேலியில் கம்பிவலை துவாரம் பெரிதாக உள்ள இடங்களில் ஆடுகள் நுழைந்து
பண்ணைக்குள் பயிரிட்டுள்ள நெல் உள்ளிட்ட மற்ற பயிர்களை மேய்ந்துவிடுகின்றன.
       ஆடுகள் மேய்ந்து பயிர்கள் சேதமடைவதால் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் ஆட்டுப்பட்டி உரிமையாளர்களை அடிக்கடி எச்சரித்து வந்தனர். இப்பிரச்சினைக்கு தீர்வுகாண் ஆடுகளுக்கு கழுத்தில் 2 அடி நீளமுள்ள 3 குச்சிகளை ஆட்டின் கழுத்தில் இறுக்காதவாறு  கட்டி மேய்ச்சலுக்கு ஓட்டி செல்கின்றனர். குச்சிகள் நீளமாக உள்ளதால் ஆடு தலையை கம்பிவேலிக்குள் நுழைக்க முடிவதில்லை. இதனால் தற்போது ஆட்டு உரிமையாளர்கள் நிம்மதியாக மேய்ச்சலுக்கு செல்வதாக கூறுகின்றனர். இதைக்கண்ட பவானிசாகர் சுற்றுவட்டார கிராம மக்களும் இப்புதிய யுக்தியை கையாண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment