தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, November 18, 2013

திருநங்கைகளுக்கு ரேசன் கார்டு வழங்க வேண்டும்: திருநங்கைகள் வெள்ளிவிழாவில் தீர்மானம்
************************************************************************
 சத்தியமங்கலம்,நவ 17:
திருநங்கைகளுக்கு ரேசன் கார்டு வழங்க வேண்டும் என சத்தி அருகே நடந்த திருநங்கைகள் வெள்ளிவிழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


சத்தியமங்கலம் அடுத்துள்ள ராஜன்நகர் தனியார் திருமண மண்டபத்தில் திருநங்கைகள் வெள்ளிவிழா கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக 33 மாவட்டத்தில் இருந்து  ஆயிரக்கணக்கான திருநங்கைகள் ராஜன்நகர் வந்தனர். மும்பை, பெங்களூரு, டெல்லி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த திருநங்கைகளும் இதில் கலந்துகொண்டனர்.


விழாவில், திருநங்கைகளாக 2 பேர் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு முறைப்படி மடிசீர் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தி மற்றும் வித்யா ஆகிய இருவரும் 65 வயதை கடந்தவர்கள் என்பதால் கூட்டத்தில் மூத்த திருநங்கைகளாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு மலர் கிரீடம் வைத்து ஆசி பெற்றனர்.இந்த கூட்டம் மூலமாக திருநங்கைகள் தங்களது உறவை பலப்படுத்தவும் பல்வேறு இடங்களில் வாழும் உறவினர்களை ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பையும்  பிரச்னைகளை தீர்த்துக்கொள்ளும் தளமாக அமைய வெள்ளிவிழா கொண்டாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. திருநங்கைகளை பார்ப்பதற்காக பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் ராஜன்நகர் வந்திருந்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பில் தனிஒதுக்கீடும்  மற்றும் ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை வழங்க வேண்டும். ஈரோடு மற்றும் திருச்சி மாவட்டத்தில் மட்டுமே வீடு கட்டித்தரப்படவில்லை. இரு மாவட்டத்தில் இலவசமாக வீடு கட்டித் தர வேண்டும். சுயதொழில் செய்து வரும் திருநங்கைகளுக்கு மானியத்துடன் கடன் வழங்க வேண்டும். மக்களோடு மக்களாக வாழ எங்களை அரசு அங்கீகாரம் செய்து சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 comments:

Post a Comment