தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, November 18, 2013

தேசிய நூலக வாரவிழா- (நவம்பர் 14 முதல் நவம்பர் 20 வரை)




கட்டுரையாளர்:
**********************
எஸ்.ஜெயகாந்தன், செயலாளர்,
விடியல் சமூகநல இயக்கம், புன்செய் புளியம்பட்டி


     

         நூலகத்தை தேடிவந்து, உலக செய்திகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ளவும், நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளவும், பொது அறிவை பெருக்கி கொள்ளவும், வாசகர்களின் அறிவு தாகத்தை தீர்த்து வைக்கவும் நூலகம் பெரும்பணி ஆற்றுகிறது. சாதி, மத, இன, வேறுபாடின்றி உயர்ந்தோர்- தாழ்ந்தோர் எனும் இழிநிலை அகற்றி குழந்தைகள் முதல் முதியோர் வரை நூலகத்தை பயன் படுத்துகின்றனர். அறிவு திருகோவில்களாக நூலகங்கள் திகழ்கின்றன.      
       பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 14 முதல் நவம்பர் 20 வரை தேசிய நூலக வாரவிழா கொண்டாடபடுகிறது.
        நூலக வாரவிழா கொண்டாடப்படும் இத்தருணத்தில் இதுவரை நூலகத்தில் உறுப்பினராக சேராதவர்கள் உறுப்பினராக முன்வரவேண்டும். நாள்தோறும் அல்லது வாரந்தோறும் நூலகத்துக்கு செல்லும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். நல்ல நூல்களை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்ய வேண்டும். பழைய நல்ல நிலையில் உள்ள புத்தகங்களை நூலகத்துக்கு வழங்கி மற்றவர்கள் படித்து பயன் பெற உதவ வேண்டும். 

நூலகம் குறித்த அறிஞர்களின் கருத்துகள்:
  • நூலகம் என்பது இயக்ககம் அல்ல! இயக்கம் என்கிறார் இந்திய நூலகவியல் தந்தை எஸ்.ஆர். ரங்கநாதன்.
  • அறிவால் உயர்ந்து  அரியாசனம் செய்வோம் என்கிறார் தேசத்தந்தை மகாத்மா காந்தி
  • நூல்களால் நைந்த நேயங்கள் தைப்போம் என்கிறார் அன்னை இந்திரா காந்தி
  • நூலகம் நமக்கு ஒய்வு நேர உலகம் என்கிறார் பேரறிஞர் அண்ணா
  • புத்துலகம் படைக்க புத்தகம் படிப்போம் என்கிறார் அப்துல் கலாம்
  • புத்தகம் படிப்போம் வித்தகம் படிப்போம் என்கிறார் பெரியார்
  • நுட்பங்கள் நுகல, நூலகங்கள் செல்வோம் என்கிறார் கிரகாம்பெல்
  • அறிவால் உயர்வோம், அறிவாள் தவிர்ப்போம் என்கிறார் பில்கேட்ஸ்
  • படிப்போம், படிப்போம், பதிப்போம் என்கிறார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
  • ஒரு நூலகம் திறக்கப்படும் போது 100 சிறைச்சாலைகள் மூடபடுகின்றன என்கிறார் சுவாமி விவேகானந்தர்
     புத்தகத்தில் உலகத்தை படிப்போம், உலகத்தையே புத்தகமாக படிப்போம் என்கிறது உலக பொதுமறையாம் திருக்குறள். அடுத்த தலைமுறைக்கு பரிசளிக்க விரும்பினால் புத்தகத்தை பரிசாக கொடு என்கிறது சீன பழமொழி. என்னை தேடி நீ வந்தால் உன்னை தேடி உலகம் வரும் என்கிறது நூலகம். எனவே பொதுமக்களும், இளைய தலைமுறையினரும் நூலகத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

0 comments:

Post a Comment