தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, October 9, 2014

சாதாரண மனிதனையும் மாமனிதனாக மாற்றுவது புத்தகங்கள் தான் - எழுத்தாளர் நாஞ்சில் நாடன்
***********************************************************************


புன்செய் புளியம்பட்டி அக்டோபர் 9 :ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் புத்தக திருவிழா நகராட்சி திருமண மண்டபத்தில் 5 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்று வருகிறது.

முதல் நாள் நிகழ்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பவானிசாகர் ஒன்றிய செயலாளர் பி.என்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றார்.வெள்ளிங்கிரி, என்.கே.இளங்கோ, தருமராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் புத்தகமும் பொது அறிவும் என்ற தலைப்பில் பேசும் போது, புன்செய் புளியம்பட்டி போன்ற நகராட்சிகளிலும் புத்தக திருவிழாக்கள் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைக்கு பொதுவாக சமூகம் தொலைகாட்சிகளின் பின்னால் முடங்கி கிடக்கும் சூழலில் இத்தகைய புத்தக கண்காட்சிகள் இளைய தலைமுறைக்கு வாசிக்கும் பழக்கத்தை கற்று கொடுக்கும் களமாக திகழ்கிறது. புத்தகம் என்பது வெறும் காகிதம் கிடையாது. வெறும் மை கிடையாது. வெறும் எழுத்து கிடையாது. அது நம் முன்னோர்களின் பண்பாடு, வரலாற்று தலைவர்களின் வாழ்கை. எல்லா பருவத்திற்கும் ஏற்றவாறு நமது வாழ்கை முறையை போதிப்பது  புத்தகங்களே.

இசையை பற்றி, அறிவியல், அரசியல், விஞ்ஞானம், சினிமா, தாவரங்கள், மரம், இயற்கை விவசாயம், விடுதலை போராட்டம், விலங்குகள், தன்னம்பிக்கை என புத்தகங்கள் வாயிலாக நாம் நிறைய கற்று கொள்ளலாம். நிறைய பொது அறிவு விசயங்களை தெரிந்து கொள்ளலாம். பாட புத்தகங்களை தவிர பிற புத்தகங்களை படிப்பது ஒன்றும் பாவம் அல்ல. பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் புத்தகங்களை வாசிக்க குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். திருக்குறளுக்கு மட்டுமே 250 இக்கும் மேற்பட்ட உரைகள் உள்ளது. ஒவ்வென்றையும் நாம் வாசிக்கும்  போது யார் என்ன சொல்லி இருக்கிறார்கள் என அறிந்து கொள்ளலாம். சராசரி மனித வாழ்வை நாம் அனைவரும் வாழ்கிறோம். ஆனால் ஒரு மனிதனுடைய தேடல் என்பது அதுவல்ல. நம் இந்திய பாரம்பரியம் என்பது பல்லாயிரகணக்கான ஆண்டு பழமை வாய்ந்தது. இத்தகைய பெருமை மிக்க பாரம்பரியத்தில் இருந்து கொண்டு எதையும் கற்று கொள்ள மாட்டேன் என்பது வருத்தம் அளிக்கிறது. மனிதனிடம் தெளிவு வர காரணம் புத்தகங்கள் தான். இரண்டு  கோடி பேர் வசிக்கும் கேரளாவில் 75 லட்சம் பேர் நாளிதழ் வாசிக்கிறார்கள். ஆனால் ஏழு கோடி பேர் வசிக்கும் தமிழகத்தில் வெறும் 25 லட்சம் பேர் மட்டுமே நாளிதழ் வாசிக்கிறார்கள். கேரளாவோடு ஒப்பிடும் போது தமிழகம் வாசிப்பில் பின்தங்கி உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். சாதாரண மனிதனையும் மாமனிதனாக மாற்றுவது புத்தகங்கள் தான். எனவே இளைய தலைமுறையினர் வாசிக்கும் பழக்கத்தை துவக்க வேண்டும் என்றார்.

அதனை தொடர்ந்து பட்டிமன்ற பேச்சாளர் கோவை தனபால் சிரித்து வாழ வேண்டும்  என்ற தலைப்பில் பேசினார்.

0 comments:

Post a Comment