தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, October 12, 2014

காந்தியை மகாத்மாவாக மாற்றியது நூல்கள் தான்! - பழ.கருப்பையா



புன்செய் புளியம்பட்டி அக்டோபர் 12 :

ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் புத்தக திருவிழா நகராட்சி திருமண மண்டபத்தில் 5 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற விழாவில் பழ.கருப்பையா கலந்து கொண்டு ஒரு சொல் கேளீர் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றார். பவானிசாகர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பி.என் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அம்மா மெட்ரிக் பள்ளியின் செயலாளர் ராணி அன்பு முன்னிலை வகித்தார்.

பழ.கருப்பையா அவர்கள் ஒரு சொல் கேளீர் என்ற தலைப்பில் பேசும் போது, பொதுவாக மனித வாழ்வு மட்டும் தான் மதிப்பீடுகளின் அடிப்படையில் அமைகிறது. உலகத்தில் எல்லா உயிரினங்கள் இருந்தாலும் கூட மனிதன் சிறப்பானவன். ஏனென்றால் அவன் சிந்தனையில், செயல்பாடுகளில் தனித்து நிற்கிறான். சமூக கோட்பாடுகளின் படி மனிதன் நடக்கும் போது தனித்து நிற்கின்றான். காந்தி நாட்டில் உள்ள இளைஞர்களை பார்த்து நீங்கள் எல்லாம் பொதுவாழ்கைக்கு வாருங்கள் என்றார். நாட்டில் உள்ள யோக்கியன் எல்லாம் காந்தி நம்மை தான் அழைக்கிறார் என்று பொதுவாழ்கைக்கு வந்தார்கள். அழைக்கின்ற மனிதர் யாராக இருகின்றரோ அவரை பின்பற்ற கூடிய மனிதர்கள் இருக்கிறார்கள். மனிதன் பிறக்கும் போது மூச்சை இழுக்கிறான். கடைசியில் மூச்சை விடுகிறான். ஆக மனித வாழ்கை என்பது இவ்விரண்டுக்கும் இடைப்பட்டது. இயற்கை நமக்கு கற்று கொடுத்த வாழ்கை தற்சார்புடையது. தன்னை நம்பி தான் ஒருவன் வாழ முடியும்.

நம் பெரும்பாலான நேரத்தை தொலைகாட்சிகள் விழுங்கி விடுகின்றன. மனிதன் நல்ல அறிவை பெற நல்ல நூல்களை தேர்வு செய்து படிக்க வேண்டும். ஒரு நூலை படிக்கின்ற போது உங்கள் வாழ்கை மாறுகிறது. காந்தியை பாதித்த நூல்கள் ஏராளம். காந்தியை மகாத்மாவாக மாற்றியது நூல்கள் தான்.எந்த ஒரு மனித வாழ்கையும் நமக்கு முன்னால் இருந்த மிகசிறந்த அறிவை பெற்று கொண்டால் தான் மாறுதல் அடையும். படிக்காதவர்கள் மிக சிறந்த மனிதர்களாக இருந்தது உண்டு. காமராஜர் படிக்காதவராக இருந்தாலும் மிக சிறந்த ஆட்சியாளராக இருந்தார். நம்முடிய அறிவை பிறருக்கு வழங்கி பிறருடிய அறிவை நாம் பெற வேண்டும். புத்தக கண்காட்சிகள் இத்தகைய அறிவை வழங்கும் ஒரு களமாக திகழ்கின்றன. படிக்கின்ற பழக்கத்தை பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் உருவாக்கி தர வேண்டும். பிறகு அவர்கள் சிறந்த நூல்களை அவர்களாகவே தேடி கொள்வார்கள்.

இவ்விழாவில் அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோவில் பரம்பரை அறங்காவலர் எம்.ஞானதண்டபாணி, தபோவனம் பள்ளி முதல்வர் ஆர்.முத்துக்குமார், ஞானவேல் மில்ஸ் மலர்விழி, சிந்தாமணி வித்யாலயா ராமசாமி, பசுமை பேராயம் நந்தகுமார் ஆகியோர் உள்பட பலர் பங்கு கொண்டனர்.

0 comments:

Post a Comment