தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, October 10, 2014

ஒரு வாக்கியம் உங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றி விடும் - பத்திரிகையாளர் லேனா தமிழ்வாணன்
*****************************************************************************************************



புன்செய் புளியம்பட்டி அக்டோபர் 11 :
ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் புத்தக திருவிழா நகராட்சி திருமண மண்டபத்தில் 5 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற விழாவில் பிரபல பத்திரிகையாளர் லேனா தமிழ்வாணன் கலந்து கொண்டு வாசிக்க நேரமிருக்கு என்ற தலைப்பில் உரையாற்றினார்.

விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றார். மக்கள் நல சங்க தலைவர் டாக்டர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். கோவை புன்செய் புளியம்பட்டி அரிமா சங்க மாவட்ட ஆளுனர் பி.ஆறுமுகமணி முன்னிலை வகித்தார்.
பத்திரிகையாளர் லேனா தமிழ்வாணன் அவர்கள் வாசிக்க நேரமிருக்கு என்ற தலைப்பில் பேசும் போது, என்னுடைய மேடை வாழ்விலே நான் இரண்டு விதமான நாகரிகங்களை பின்பற்றி வருகிறேன். ஒன்று எத்தனை நேரம் பேசுவது, இரண்டாவது சரியான நேரம் வரை பேசுவது.  கடிகாரத்தை கையில் வைத்து கொண்டு பேசுவது தமிழகத்திலே நான் ஒருவன்தான். பொதுவாக விழாக்களுக்கு ஆட்களை கூட்டி வருவார்கள். ஆனால் இங்கு வந்துள்ள கூட்டம் கூட்டி வந்த கூட்டமல்ல. கூடி வந்த கூட்டம். மக்கள் படிக்கிற பழக்கத்தை நோக்கி திரும்புவார்கள் என்பதற்கு புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழா ஒரு உதாரணம்.

பொதுவாக எந்த வேலை சொன்னாலும் நேரமில்லை என்று சொல்வது வழக்கம். நேரத்தை எவ்வாறு மிச்ச படுத்தலாம், எந்த நேரத்தில் படிக்கலாம் என்பதை பற்றி  நான் உரையாற்ற உள்ளேன். நேரமில்லை என்று சொல்வதை போல ஏமாற்று வேலை எதுவும் இல்லை. எனக்கு மனமில்லை என்று சொல், நேரமில்லை என்று சொல்லாதே என்பது அறிஞர் ஒருவரின் வாக்கு.

ஒரு வாக்கியம் உங்கள் வாழ்க்கையையே மாற்றும். எந்த வார்த்தை உங்கள் வாழ்க்கையை புரட்டி போடும் என்று தெரியாது. நிறைய படியுங்கள். எதாவது ஒரு வாசகம் உங்கள் வாழ்க்கையை மாற்றி விடும். இதுதான் பாதை, இதுதான் பயணம் என்பதை உங்களுக்கு கற்று கொடுப்பது புத்தகங்கள் தான். இந்தியர்கள் ஒரு ஆண்டுக்கு சராசரியாக 32 பக்கங்கள் தான் படிக்கிறார்கள். ஆனால் வெளிநாட்டவர் 1200 பக்கங்களை படிக்கிறார்கள் என்பது ஆய்வு அறிக்கை ஒன்று தரும் தகவல். படிக்க நேரமில்லை என்பது  பெரும்பாலான மனிதர்கள் சொல்லும் சொல். ஆனால் ஒரு நாளில் எத்தனையே நேரத்தை நாம் வீணாக கழிக்கிறோம். புத்தகம் வாசிக்க இதுதான் நேரம் என்று எதுவும் கிடையாது. பேருந்துக்கு காத்திருக்கும் போது, ரயில் பயணத்தின் போது, இப்படி கிடைக்கும் நேரத்தில் எல்லாம் நாம் புத்தகம் வாசிக்கலாம். பயண நேரத்தை விரயமாக்குவதை விட பயனுள்ள வகையில் புத்தகத்தை படிக்க பயன்படுத்தலாம். காத்திருக்கும் நேரத்தில் ஒரு மனிதன் 300 புத்தகங்களை படித்து விட முடியும். பாடத்துக்கு அப்பாற்பட்டு படிக்கும் விஷயம் தான் வாழ்க்கைக்கு  உதவ போகின்றன. வகுப்பு கணக்குகளை போடுவது வேறு. வாழ்கை கணக்குகளை போடுவது வேறு. நேர விழுங்கிகளை நேர வழங்கிகளாக மாற்ற வேண்டும்.

இளைய தலைமுறையினர் பெரும்பாலும் புத்தகத்தை படிப்பதே இல்லை. ஒரே இடத்தில் அனைத்து விதமான புத்தகங்கள் கிடைக்கும் வகையில் புத்தக திருவிழா நடைபெறுகிறது. பெற்றோர்கள் இத்தகைய புத்தக கண்காட்சிக்கு குழந்தைகளை அழைத்து வந்தது அவர்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கி தர வேண்டும் என்றார். பின்னர்.  டாக்டர் ராமசாமி எங்கே போகிறோம், எங்கோ போகிறோம். என்ற தலைப்பில் பேசினார். அதனை தொடர்ந்து நெல்லை தாமிரபரணி கலைக்குழுவின் நையாண்டி தர்பார் நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவில் பி.கே.சண்முகம், சித்ரா சுப்பிரமணியம், டாக்டர் பிரேம்குமார், கோவை புளியம்பட்டி அரிமா சங்க நிர்வாகிகள் ராமசாமி, சையத் ரியாயுதின், வாசுகி, நந்தகுமார் உள்ளிட்ட பலர் பங்கு கொண்டனர்.

0 comments:

Post a Comment