தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, October 6, 2014

புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழா - 2014
*********************************************************
அக்டோபர் 8 முதல் 12 வரை ஐந்து நாட்கள் நடக்கிறது 



             புன்செய் புளியம்பட்டி விடியல் சமூக  நல இயக்கத்தின் சார்பில் மூன்றாம்  ஆண்டு புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழா வருகின்ற அக்டோபர்  8 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை ஐந்து  நாட்கள் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

           இது குறித்து விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் கூறி இருபதாவது. இளைய தலைமுறையிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக  புத்தக திருவிழாவை விடியல் சமூகநல இயக்கம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு மூன்றாம்  ஆண்டு  புத்தக திருவிழா வருகின்ற அக்டோபர்  8 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை ஐந்து  நாட்கள் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை  புன்செய் புளியம்பட்டி மாதம்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

புத்தக கண்காட்சியின் சிறப்பம்சங்கள் :
*****************************************************         
              இக்கண்காட்சியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பாரதி புத்தகாலயம் , விகடன் பதிப்பகம், தமிழ் தேசம் புத்தக நிலையம் , ஸ்டுடண்ட் புக் ஹவுஸ், லாவா புக்ஸ், ரேடிங் இந்தியா புக்ஸ், நாகஜோதி புத்தக நிலையம், வள்ளலார் புத்தக நிலையம், அன்னை புத்தக நிலையம், தன்னம்பிக்கை, விவேகானந்தா புத்தகாலயம்  உள்ளிட்ட 25 இகும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் புத்தக அரங்கங்கள் இடம் பெறுகின்றன. பல்வேறு  தலைப்புகளில் இலட்சகணக்கான தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் ஒரே இடத்தில கிடைக்க உள்ளது.கல்வி குறுந்தகடுகளும் கிடைக்கும். புத்தக கண்காட்சியில் வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 % சிறப்பு தள்ளுபடி வழங்க படுகிறது. ரூபாய் 100 இக்கு புத்தகம் வாங்கும் வாசகர்களுக்கு புத்தக ஆர்வலர் என்ற  சான்றிதழ் வழங்க படுகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். இது தவிர அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய இருநாட்களிலும் பாரம்பாரிய உணவு திருவிழா நடைபெறுகிறது. நம் பாரம்பரிய சத்தான உணவு வகைகள் குறைந்த விலையில் கிடைக்கும்.

சிறப்பு பேச்சாளர்கள் :
*********************************
              தினசரி மாலை 6 .00 மணிக்கு பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதனை தொடர்ந்து தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர்கள் பங்குபெறும் சிறப்பு சொற்பொழுவுகள் நடைபெறுகிறது. 

          அக்டோபர் 8 ஆம் தேதி புலவர் புலமைபித்தன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன், கோவை தனபால் ஆகியோர் பேசுகிறார்கள். அக்டோபர் 9 ஆம் தேதி பத்திரிகையாளர் லேனா தமிழ்வாணன், டாக்டர் ராமசாமி ஆகியோர் பேசுகிறார்கள். தொடர்ந்து  நெல்லை தாமிரபரணி கலைக்குழுவின் நையாண்டி தர்பார் நிகழ்ச்சி நடக்கிறது. அக்டோபர் 10 ஆம் தேதி முனைவர் இளசை சுந்தரம் தலைமையில் சிறப்பு சொல்லரங்கம் நடைபெறுகிறது. அக்டோபர் 11 ஆம் தேதி பழ.கருப்பையா, சத்தியமங்கலம் சுந்தராமன் ஆகியோர் பேசுகிறார்கள். தொடர்ந்து ஜால சக்ரவர்த்தி யோனா அவர்களின் மாயாஜால் மேஜிக் ஷோ நடக்கிறது. அக்டோபர் 12 ஆம் தேதி நிறைவு விழாவில் கம்பம். செல்வேந்திரன், நல்ல கீரை சிவா, நல்ல சோறு ராஜமுருகன் ஆகியோர் பேசுகிறார்கள்.

            தகவல் தொழில்நுற்ப வளர்ச்சியின் காரணமாக நமது நேரத்தை செல் போன்களும் , இண்டர்நெட்டும் ஆக்ரமித்து கொண்டுள்ளது. சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த புத்தகங்களால் முடியும். அறிவு திருகோவில்களாக புத்தகங்கள் திகழ்கின்றன. எனவே இளைய தலைமுறையினர் புத்தக வாசிப்பில் தனது கவனத்தை திருப்ப வேண்டும். புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழாவின் ஐந்து  நாட்களிலும் பள்ளி, கல்லூரி நிறுவனங்களும்,  பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் திரளாக கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என விடியல் செயலாளர் எஸ். ஜெயகாந்தன் கேட்டு கொண்டுள்ளார்.

0 comments:

Post a Comment