தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, September 1, 2015

புலிகள் காப்பகத்தின் தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்
 

சத்தியமங்கலம்,செப் 1:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சத்தியமங்கலம் வனக்கோட்டத்தை பிரித்து சத்தியமங்கலம் மற்றும் ஆசனூர் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு சத்தி, பவானிசாகர் மற்றும் தலமலை வனச்சரகங்களும் ஆசனூர் புலிகள் காப்பகத்துக்கு ஆசனூர், தாளவாடி மற்றும் கேர்மாளம் வனசரகங்களும் ஒதுக்கப்பட்டன. தற்போது சத்தி, ஆசனூர் புலிகள் காப்பகத்து தனித்தனி இணை இயக்குநர் நியமிக்கப்பட்டு அவர்கள் மேற்பார்வையில் புலிகள் காப்பக பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

புலிகள் காப்பகத்தில் 25 கிமீ தூரம் வரை மைசூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது.இங்கு வாழும் விலங்குகள் நீர்,தீவனம் மற்றும் இனப்பெருக்கம் போன்ற காரணங்களாக அடிக்கடி சாலையை குறுக்கே செல்வதுண்டு. இந்த வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் வனவிலங்குகள் மீது மோதி விபத்து ஏற்படுத்துவதின் விளைவாக வனவிலங்குகள் உயிரிழப்பது அடிக்கடி நிகழ்கிறது. கர்நாடக அரசு பேருந்து மோதியதில் யானை இறந்ததும் அடையாளம் தெரியாத வாகனம் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறுத்தையும் தற்போது ஒரு சிறுத்தை என மொத்தமாக  2 சிறுத்தைகள் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது. 

தேசிய புலிகள் காப்பக ஆணையத்தின்படி, நீர்நிலைகள் உள்ள பகுதிகள், வனவிலங்குகள் அடிக்கடி கடக்கும் சாலைகள் என கணக்கெடுக்கப்பட்டு அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும். பிற புலிகள் காப்பகத்தில் இந்த முறை பின்பற்றப்பட்டுள்ளது. ஆனால் சத்தி,ஆசனூர் புலிகள் காப்பகத்தில் வேகத்தடை அமைக்கப்படாததால் இவ்வாறு வாகனத்தில் மோதி விலங்குகள் உயிரிழப்பது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அவ்வவ்போது குரங்குகள், மான், காட்டுப்பூனை போன்றவை வாகனத்தில் அடிப்பட்டு உயிரிழக்கின்றன.

வனஉயிரினங்களை பாதுகாப்பதற்கு அடிக்கடி சாலையை கடக்கும் இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

0 comments:

Post a Comment