தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, September 23, 2014

போக்குவரத்து விதிமுறை மீறல்: காந்தி கல்லூரி பேருந்து மீது வழக்கு


சத்தியமங்கலம், செப் 22:

போக்குவரத்து விதிமுறையை மீறியதாக காந்தி கல்லூரி பேருந்து மீது கோபி வட்டார போக்குவரத்து அலுவலர் கே.பி.ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்தார்.

சத்தியமங்கலம் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில் அதிக அளவில் கல்லூரி மாணவர்கள் ஏற்றிச் செல்வதாக வட்டார போக்குவரத்து அலுவலருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கோபி வட்டார போக்குவரத்து அலுவலர் கே.பி.ஜெயக்குமார், சத்தி மோட்டார் ஆய்வாளர் என்.சரவணக்குமார் ஆகியோர் சத்தி கோவை சாலையில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர்.

அவ்வழியாக சென்ற சரக்கு வாகனங்கள் மற்றும் பேருந்துகளை நிறுத்தி ஆய்வு செய்தனர்.அப்போது, அதிக பாரம் ஏற்றிய சரக்கு வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தாற்காலிக அனுமதி பெறாமல், தமிழகத்தில் இயங்கிய கர்நாடக மாநில லாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

அதிக இரைச்சலுடன் சினிமா பாடல்களை ஒலிபரப்பிய தனியார் பேருந்துகள் நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்களிடம் பேருந்துகளில் நோயுற்ற பயணிகள் பயணிப்பதால் அவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, கல்லூரி பேருந்துகளை நிறுத்தி சோதனையிட்டதில் விண்ணப்பள்ளி காந்தி பாலிடெக்னிக் பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான மாணவ,மாணவிகளை ஏற்றிச்செல்வது தெரியவந்தது. விதிமுறைகளை மீறியதாக காந்தி கல்லூரி பேருந்துகள் மீது வழங்குப்பதிவு செய்யப்பட்டது.

ஓட்டுநர் உரிமம் இன்றி ஓட்டுதல், அதிகபாரம், காற்று ஓலிப்பான் பயன்பாடு, உரிமம் புதுப்பித்தல் இன்றி இயக்குதல் போன்ற பல்வேறு விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டன.

0 comments:

Post a Comment