தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, September 1, 2014

புன்செய் புளியம்பட்டியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்







புன்செய் புளியம்பட்டி செப்டம்பர் 2:

புன்செய் புளியம்பட்டியில்  நடைபெற்ற ஊரவலத்தில் 100 இகும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் எடுத்து வரப்பட்டு பவானி ஆற்றில் கரைக்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி புன்செய் புளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான நல்லூர், புங்கம்பள்ளி, நொச்சிகுட்டை, கவுண்டம்பாளையம், வெங்கநாயகன்பாளையம், நால்ரோடு உள்பட பல்வேறு இடங்களில் 100 இகும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.

இதனை தொடர்ந்து நேற்று புன்செய் புளியம்பட்டியில் நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக பல்வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட விநாயகர் சிலைகள் நால்ரோட்டில் வரிசையாக நிறுத்தப்பட்டன. மாலை 5 மணிக்கு புளியம்பட்டி நால்ரோட்டில் துவங்கிய ஊர்வலம் கோவை மெயின் ரோடு, மாதம்பாளையம் ரோடு, மறைமலைஅடிகள் வீதி, சத்தியமங்கலம் மெயின் ரோடு, சுல்தான் ரோடு வழியாக பவானி ஆற்றை சென்று அடைந்தது. ஊர்வலத்தில் பங்கேற்ற இந்து முன்னணியினர் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சிலைகளை ஆற்றில் கரைத்தனர். ஊர்வலத்தையொட்டி ஏரளாமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு  இருந்தனர்.

0 comments:

Post a Comment