தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, September 10, 2014

புத்தகம் வாசிப்பதால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும் - பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

 
 புத்தகங்களை பொருள் உணர்ந்து ரசிக்கும்போது வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும் என பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தெரிவித்தார்.

மதுரை புத்தகத் திருவிழாவில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் அவர் பேசியது: நமது ஊர்களில் இருந்த பல அரிய பொக்கிஷங்களை நாம் கண்டுபிடித்து பாதுகாக்கத் தவறி விடுகிறோம். கொல்கத்தா ஓவியங்களில் மதுரை புதுமண்டபமும் அழகர்கோவில் மதில் சுவர்களும் வரையப்பட்டிருப்பதை பார்த்து வியந்தேன். நமக்குத் தெரியாத பல தகவல்கள் புத்தகங்களில் அடங்கியுள்ளன. புதிய புத்தகங்கள் மட்டுமல்லாமல், பழைய புத்தகங்களையும் தேடிக் கண்டுபிடித்து வாசிக்க வேண்டும்.

அவை கூறும் தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். புத்தகங்களால் நமக்குத் தெரியாத வரலாறுகள் தெரியவரும்.

ஒருவரை சந்திக்கும்போது முதலில் நம்மை அறிமுகம் செய்து கொள்ள வேண்டும் என்ற பண்பை கம்ப ராமாயணக் காட்சி நமக்கு கற்றுத் தருகிறது. ராமனைச் சந்திக்கும் அனுமன் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறான். முத்துக் குளிக்கும்போது கடலில் மூழ்கியிருக்கும் நபருக்கு கயிற்றைப் பிடித்துக்கொள்ள மைத்துனரை வைத்திருப்பதாக சங்க இலக்கிய பாடல் கூறுகிறது. தனது தங்கையின் தாலிக் கயிறு அறுந்து போகாமல் அவர்தான் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை நமக்குத் தெரியவரும்.

எழுத்துக்கு உள்ள வலிமை பேச்சுக்குக் கிடையாது. எழுத்தாளர்கள் கற்பனையாக தெரிவித்த விஷயங்கள் உண்மையாக நடைபெற்ற வரலாறுகளும் உள்ளன. காலக் கணிப்பான்களைப் போன்று எழுத்துகள் விளங்கியுள்ளன. குழந்தைகளுக்கு கதை கூறுவது போல் புத்தகங்களை வாசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். ரசிக்கிற தன்மை இருந்தால்தான் படிக்கும் பழக்கம் அதிகமாகும்.

தமிழ் மொழியில் ஒரு வார்த்தைக்கு 44 சொற்கள் உள்ளதாக தேவநேயப் பாவணர் கூறியுள்ளார். மொழிக்கு அழகு சேர்ப்பது நகைச்சுவை. சொல் தொகுப்புகளைப் பயன்படுத்தி பிறரை மகிழ வைக்கும் சிறப்பு தமிழ்மொழிக்கே உரியதாகும். சங்க இலக்கியங்கள் என்றாலும், திருக்குறளாக இருந்தாலும், அவற்றை ஆழ்ந்து படிக்கும் போது நம் சிந்தனையைத் தூண்டுவதாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட நூலை மட்டும் படிக்காமல் எதிர்மறையான நூல்களையும் படிக்க வேண்டும். தகவல்களையும் அறிவியலையும் பகுத்தறிவையும் கற்றுத் தருவதாக நூல்கள் இருக்கின்றன.

திருக்குறளுக்கு பலரும் உரை எழுதியதால், அதன் பொருளை பலவாறு உணர்ந்து ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. வாசிக்கும்போது ஒரு நூல் பேசப்பட வேண்டும். அதன் பொருள் திரும்பத் திரும்ப மனதில் வந்து செல்வதாக இருக்க வேண்டும். நூல்களை வாசிக்கும்போது குடும்பத்தோடு அமர்ந்து படிக்கலாம். ஒருவருக்கொருவர் கலந்துரையாடி படிப்பதால், வாழ்வில் மகிழ்ச்சி பிறக்கும் என்றார்.

நிகழ்ச்சியில், திரைப்பட நடிகர் ஜோ.மல்லூரி, திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோரும் பேசினர்.

பபாசி முன்னாள் தலைவர் கவிதா சொக்கலிங்கம் தலைமை வகித்தார். இணைச் செயலர் ஆடம் சாக்ரடீஸ் வரவேற்றார். பொருளாளர் கோ.ஒளிவண்ணன் நன்றி கூறினார்.

0 comments:

Post a Comment