தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, September 5, 2014

புளியம்பட்டி வாசிக்கிறது!




புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் 3 ஆம் ஆண்டு புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழா - 2014 வருகின்ற அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் மற்றும் புத்தக திருவிழா குறித்த விழிப்புணர்வை மாணவ மாணவியரிடம் ஏற்படுத்தும் பொருட்டு வருகின்ற 8/9/2014 திங்கட்கிழமை காலை 9 மணியளவில் புன்செய் புளியம்பட்டி கெ.ஒ.ம.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புளியம்பட்டி வாசிக்கிறது என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் தலைமை ஆசிரியர் கே.ஓதியப்பன், ஆசிரிய பெருமக்கள், மாணவிகள் மற்றும் விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன், விடியல் தலைவர் கே.தருமராசு, லோகநாதன், சக்திவேல் உள்பட விடியல் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு சுமார் 1 மணிநேரம் புத்தகங்களை வாசிக்க உள்ளனர்.

அறிவு திருவிழாவான புத்தக திருவிழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

மேலும் விபரங்களுக்கு எஸ்.ஜெயகாந்தன் - 98427 80240

2 comments:

  1. அன்புடையீர்,வணக்கம்.புன்செய் புளியம்பட்டியில் மூன்றாவது ஆண்டாக புத்தக கண்காட்சி திருவிழா நடத்துவது கண்டு மிக்க மகிழ்ச்சிங்க..நம்ம கிராம பகுதி மக்களுக்கும் வாசிப்பை சுவாசிக்க நல்லதொரு வாய்ப்பை கொடுத்து வருகிறீர்...வாழ்த்துகிறோம் ..........என K. LOGANATHAN லோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல் - சத்தியமங்கலம்.

    ReplyDelete
  2. மரியாதைக்குரியவரே,வணக்கம். தங்களது சமூகத்தின் மீதான நேர்கொண்ட பார்வை சிறக்க வாழ்த்துகிறோம்.புத்தக திருவிழா மூன்றாம் ஆண்டு அனைத்து வயதினரும் பயன்பெறும் வண்ணம் சிறக்கட்டும்.........என அன்பன் பரமேஸ்வரன்.C அரசுப்பேருந்து ஓட்டுநர் TNSTC தாளவாடி கிளை.

    ReplyDelete