தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, September 9, 2014

கீழ்பவானி பாசனப்பகுதியில் நெல்நடவுப்பணி தீவிரம்




சத்தியமங்கலம், செப்.7. சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் கீழ்பவானி
பாசனப்பகுதியில் நெல்நடவுப்பணி தொடங்கியது. பவானிசாகர் அணையிலிருந்து கடந்த ஆகஸ்ட் 15 ம் தேதி கீழ்பவானி வாய்க்கால் ஒற்றைப்படை மதகுகளுக்கு நன்செய்பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 1 இலட்சத்து 3 ஆயிரத்து ஐநூறு ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நீர்திறக்கப்பட்டு 22 நாட்கள் ஆகியுள்ள நிலையில் பவானிசாகர், தொட்டம்பாளையம், எரங்காட்டுர், அய்யன்சாலை, மாரனூர், செண்பகபுதூர், பெரியூர், உக்கரம், சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் உழவு மற்றும் நடவுப்பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். 

கிளைவாய்க்கால்களில் திறக்கப்பட்ட நீரின் மூலம் நாற்றாங்கால் தயார் செய்து விதை நெல் தூவி தற்போது நாற்றுக்கள் நன்கு செழித்து வளர்ந்துள்ளன. வயல் வரப்புக்கள் வெட்டி சீராக்கப்பட்டு பவர்டில்லரை பயன்படுத்தி உழவுப்பணி நடைபெறுகிறது. பின்னர் வயலில் நீர் ஒரேஅளவில் சீராக நிற்கும் வகையில் பலகையால் சமன்படுத்தப்படுகிறது.

பின்னர் அடியுரம் இடப்பட்டு நாற்றாங்காலிலிருந்து நாற்றுக்கள் பறிக்கப்பட்டு நடவுப்பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. நடவுப்பணி தொடங்கியதால் விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment