தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, September 21, 2014

சத்தி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சாகம்பரீ சகஸ்ரநாம யாகம்





சத்தியமங்கலம், செப் 22:
சத்தியமங்கலம் கொமாரபாளையம் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ சாகம்பரீ சகஸ்ரநாம யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

சத்தியமங்கலம் அடுத்துள்ள கொமாரபாளையத்தில் ஆர்ய வைஸ்ய சமூகத்தினரின் குலதெய்வமான ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 15-ஆவது ஆண்டு ஸ்ரீ சாகம்பரீ சகஸ்வரநாம மகா யாகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை மங்கல இசையுடன் ஆவாஹன பூர்வாங்க பூஜை, ஜபம் மற்றும் ஹோம வழிபாடுகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து,  மலர்களால் அலங்கரிக்கப்பட்ட  சப்பரத்தில் உற்சவரை வைத்து  ஊர்வலமாக பவானிஆற்றுக்கு பக்தர்கள் எடுத்துச் சென்றனர்.

பவானிஆற்றில் உற்வசருக்கு  புனிதநீராட்டுடன் சந்தனம்,அரிசிமாவு,திருமஞ்சனம், இளநீர் உள்ளிட்ட தீர்த்தவாரி அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன. அப்போது, பக்தர்களுக்கு மிளகுசாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.அதன்பிறகு,பக்தர்கள் ஆரவாரத்துடன் உற்சவர் கோவிலுக்கு அழைத்துவரப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, மூலவர் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர், உலக நன்மை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் ஸ்ரீ சாகம்பரீ சகஸ்ரநாமம் மகாயாகம் நடைபெற்றது. யாகத்தில் காய்கனிகள் கிழங்கு தானியங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. இந்த யாகத்தில் ஆர்ய வைஸ்ய சமூக மக்கள் திரளாக கலந்து கொண்டு அங்காபரமேஸ்வரி அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி, ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்ட்டது. விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் பி.ஜெனார்த்தனன் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.

0 comments:

Post a Comment