தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, September 1, 2014

மதுரை புத்தகத் திருவிழாவில் ஒரே மேடையில் 12 நூல்கள் வெளியீடு

 



மதுரை புத்தகத் திருவிழாவில், ஒரே நேரத்தில் 12 நூல்கள் சனிக்கிழமை வெளியிடப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கி. முத்துச்செழியன் எழுதிய பட்டம் ஒரு தலைமுறைக் கவசம், முனைவர் வே.அ. பழனியப்பன் எழுதிய தமிழ்க் கவிதை வரலாற்றில் வைரமுத்து, பேராசிரியர் உஷா மகாதேவனின் ம.கோ. களஞ்சியம், கலை இலக்கியாவின் ஆயிரம் பேர் தாதியுண்டு (ஒப்பாரிப் பாடல்கள்), முனைவர் போ. சத்தியமூர்த்தியின் புதுக்கோட்டை வட்டாரத் தாலாட்டும், ஒப்பாரியும், பேராசிரியர் பா.சிங்காரவேலனின் மதுரைச் சீமை நாட்டுப்புறக் கலையும், கலைஞர்களும், பேராசிரியர் மூ. பாலசுப்பிரமணியனின் விலை பேசும் விரல்கள், மதுரை இளங்கவின் எழுதிய மருதுபாண்டியர், க. மனோகரன் எழுதிய சேதுபதியின் சேர்வைக்காரன், அ.மு. கிஷோரின் சுருக்கெழுத்து (கவிதை), பேராசிரியர் கம்பம் புதியவனின் கூட்டாஞ்சோறு கவிதை நூல், நா. நாகராஜனின் என்றும் அன்புடன் சிறுகதை நூல் ஆகிய 12 நூல்கள் வெளியிடப்பட்டன.

மேற்கண்ட நூல்களை, காவ்யா பதிப்பகம் சார்பில், மதுரை மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. திருமலை, பேராசிரியர் இரா. மோகன் ஆகியோர் வெளியிட்டனர்.

இதில், காவ்யா பதிப்பக உரிமையாளர் காவ்யா சண்முகசுந்தரம் மற்றும் நூலாசிரியர்கள் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment