தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, December 1, 2014

புன்செய் புளியம்பட்டியில்10வது, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான  தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி



புன்செய் புளியம்பட்டி நவம்பர் 28:

புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் மற்றும் கோயம்புத்தூர் சங்கரா கல்வி நிறுவனங்கள் சார்பில் 10வது, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி விடியல் வழிகாட்டி-2014 வருகின்ற 30-11-2014 ஞாயிறு அன்று காலை 9.30 மணிக்கு நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இதுகுறித்து விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் கூறியிருப்பதாவது, புன்செய் புளியம்பட்டி  விடியல் சமூகநல இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் 10 ஆவது மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ-மாணவியர்களுக்கான தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.  இந்த ஆண்டுக்கான தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி வருகின்ற 30-11-2014 ஞாயிறு அன்று காலை 9.30 மணிக்கு புன்செய் புளியம்பட்டி மாதம்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சிக்கு சங்கரா அறிவியல் & வணிகவியல் கல்லூரி முதல்வர் எஸ்.நடராஜன் தலைமை தாங்குகிறார். சங்கரா பாலிடெக்னிக் முதல்வர் எஸ்.கணேஷ் முன்னிலை வகிக்கிறார். கோவை பாரதியார் பல்கலைகழகம் அண்ணா ஐ. ஏ. எஸ்.  பயிற்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் எம்.பத்மநாபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். தேர்வு ஆலோசனை கையேட்டினை சங்கரா கல்வி நிறுவனங்களின் இணை செயலாளர் செல்வி நித்யா ராமசந்திரன் வெளியிடுகிறார். உடல்நலம் குறித்து டாக்டர் ராமசாமி, தன்னம்பிக்கை குறித்து வானொலி தங்கவேலு ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். மேலும் புன்செய் புளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் 10  மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முக்கியத்துவம் தரவேண்டிய பகுதிகள் எவை? எப்படி படித்தால் 100 இக்கு 100 மதிப்பெண்கள் பெறலாம்? 10  மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சிறப்பாக எழுதுவது எப்படி? 12 ஆம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? , இன்ஜினியரிங் கவுன்சலிங் செல்வது எப்படி? மாணவர்கள் உடல்நலத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்?, மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்வது எப்படி? என்பது  போன்ற வினாக்களுக்கு பிரபல கல்வியாளர்கள் விழாவில் கலந்து கொண்டு வழிகாட்டுகிறார்கள். மேலும் 10  மற்றும் 12 ஆம் வகுப்பு பாடங்களில் படிக்க வேண்டிய முக்கிய பகுதிகள் குறித்து பாடவாரியாக ஆசிரியர்கள் விளக்கமளிக்க உள்ளார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் வினாவங்கி புத்தகம், தேர்வு ஆலோசனை கையேடு , குறிப்பேடு, பேனா ஆகியவை இலவசமாக  வழங்கப்பட உள்ளன.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வீணான பயம், பதற்றம் இவற்றை நீக்கி தன்னம்பிக்கையுடன் தேர்வை எழுதும் வகையிலும்,  எதிர்கால வாழ்கைக்கு வழிகாட்டும் வகையிலும் நடைபெற உள்ள
இந்நிகழ்ச்சியில்  மாணவ மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டு பயன் பெற அழைக்கிறோம். நிகழ்ச்சி குறித்து மேலும் விபரங்களுக்கு 98427 80240 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

0 comments:

Post a Comment