தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, December 24, 2014

நம்பியூர் புத்தக திருவிழா துவங்கியது

 
நம்பியூர் டிசம்பர் 24:

விடியல் சமூகநல இயக்கம் மற்றும் நம்பியூர் அரிமா சங்கம் சார்பில் நம்பியூரில் முதல்முறையாக புத்தக திருவிழா நம்பியூர் காந்திபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில்  துவங்கியது


இளைய தலைமுறையிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நம்பியூரில் முதல்முறையாக புத்தக திருவிழா டிசம்பர் 24 முதல் 28 வரை ஐந்து நாட்கள் நம்பியூர் காந்திபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில்  நடைபெறுகிறது.

நம்பியூர் புத்தக திருவிழாவின் துவக்க விழாவில் விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றார். நம்பியூர் அரிமா சங்க மாவட்ட தலைவர் பூபதி தலைமை தாங்கினார். அரிமா முன்னாள் மாவட்ட ஆளுநர் கல்யாண சுந்தரம் புத்தக அரங்கினை திறந்து வைத்தார். முதல் புத்தக விற்பனையை பி.கே.ஆர் குழும தலைவர் ஈஸ்வரன் துவக்கி வைத்தார். நம்பியூர் காவல்துறை ஆய்வாளர் ஆர்.விவேகானந்தன், உதவி தொடக்க கல்வி அலுவலர் சுப்பையா, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் கந்தசாமி, காந்திபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பையன், குமுதா கல்வி நிறுவன தலைவர் ஜனகரத்தினம், கொமரசாமி கவுண்டர் மெட்ரிக் பள்ளி தாளாளர் சிவகுமார், காமராஜ் மெட்ரிக் பள்ளி தாளாளர் கருப்புசாமி,செந்தூர் பாலிடெக்னிக் முதல்வர் அர்ஜுனன், சிந்தாமணி வித்யாலயா நிர்வாகி லோகநாதன், நம்பியூர் அரிமா சங்க தலைவர் வெற்றிவேல், அரிமா வெங்குடுசாமி மற்றும் அரிமா உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


இக்கண்காட்சியில்  25 இகும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் புத்தக அரங்கங்கள் இடம்பெற்றுள்ளன.  பல்வேறு  தலைப்புகளில் இலட்சகணக்கான தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் ஒரே இடத்தில் விற்பனைக்கு வைக்கபட்டுள்ளது. கல்வி குறுந்தகடுகளும் கிடைக்கும். புத்தக கண்காட்சியில் வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 % சிறப்பு தள்ளுபடி வழங்க படுகிறது.

தினசரி மாலை 6 .30 மணிக்கு  தலை சிறந்த பேச்சாளர்கள் பங்குபெறும் சிறப்பு சொற்பொழுவுகள் நடைபெறுகிறது. டிசம்பர் 24 ஆம் தேதி மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேசுகிறார். டிசம்பர் 25 ஆம் தேதி பெருந்துறை வளர் தென்றல் கோ.பா.ரவிக்குமார் பேசுகிறார். டிசம்பர் 26 ஆம் தேதி பேராசிரியர் செ.சு.பழனிசாமி, அரிமா கே.தனபாலன்  ஆகியோர் பேசுகிறார்கள்.  டிசம்பர் 27ஆம் தேதி கோயம்புத்தூர் தன்னம்பிக்கை பேச்சாளர் பேராசிரியர் சூரியநாராயணன்  பேசுகிறார். டிசம்பர் 28 ஆம் தேதி நிறைவு விழாவில் முனைவர் எஸ்.உஷாராணி  பேசுகிறார்.

நம்பியூர் புத்தக திருவிழாவின் ஐந்து  நாட்களிலும் பள்ளி, கல்லூரி நிறுவனங்களும்,  பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் திரளாக கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என விடியல் செயலாளர் எஸ். ஜெயகாந்தன் கேட்டு கொண்டுள்ளார்.

0 comments:

Post a Comment