தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, December 10, 2014

புன்செய் புளியம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஹாக்கி போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை
*******************************************************************************************************


புன்செய் புளியம்பட்டி டிசம்பர் 11:

புன்செய் புளியம்பட்டி கெ.ஒ.ம.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேனியில் நடைபெற்ற 32ஆவது பாரதியார் தின விழா ஹாக்கி போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

32 ஆவது பாரதியார் தின விழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டிகள் தேனியில் நடைபெற்றது. புன்செய் புளியம்பட்டி கெ.ஒ.ம.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஆரம்ப சுற்றுகளில் திருநெல்வேலி அணியை 4-0 என்ற கணக்கிலும், ஆவடி அணியை 3-0 என்ற கணக்கிலும் வென்று அரைஇறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். அரையிறுதி போட்டியில் சேலம் அணியை 1-0 என்ற கணக்கிலும் இறுதி போட்டியில் திருவண்ணாமலை ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அணியை 4-0 என்ற கணக்கிலும் வெற்று சாம்பியன் பட்டம் வென்றனர். மொத்தம் 16 டிவிசன் இடையே நடைபெற்ற ஹாக்கி போட்டியில் புன்செய் புளியம்பட்டி கெ.ஒ.ம.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று கோப்பையை வென்றுள்ளனர். இப்பள்ளி தொடர்ச்சியாக 3 ஆவது முறையாக மாநில அளவில் ஹாக்கி போட்டியில் முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது.

அதேபோல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற முதல்வர் கோப்பை ஹாக்கி போட்டியில் இரண்டாம் இடம் பெற்று கோப்பை மற்றும் தலா 75000 ரொக்கபரிசு பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு முதல்வர் கோப்பை வென்று தலா 1 லட்சம் ரொக்கபரிசு பெற்று இப்பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

சாதனை படைத்த மாணவிகளுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி புன்செய் புளியம்பட்டி ஆதிபராசக்தி கோவிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.லிங்கப்பா கவுண்டர் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் கே.ஓதியப்பன் முன்னிலை வகித்தார்.

புன்செய் புளியம்பட்டி நகராட்சி தலைவர் பி.எஸ்.அன்பு, விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன், நகரமன்ற உறுப்பினர் முரளி கிருஷ்ணன், ரஜினி ரசிகர் மன்ற தலைவர் செந்தில்குமரன் உள்பட பலரும் கலந்து கொண்டு ஹாக்கி அணி பயிற்சியாளர் அருள்ராஜ் மற்றும் கோப்பை வென்ற அணித்தலைவர் அம்முகுட்டி, வீராங்கனைகள் ஐஸ்வர்யா, ரேணுகா, கற்பகம், பாக்யா, காயத்திரி, சுப்புலட்சுமி, பூங்கொடி, துர்காதேவி, கோமதி, சுகப்ரியா, நர்மதா, யமுனாதேவி, ஜெயஸ்ரீ, அப்ரீதா, அஸ்வினி, பார்வதி, பாத்திமாபிவி ஆகிய மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சாதனை மாணவிகள் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஊர்வலம் ஆதிபராசக்தி கோவிலில் தொடங்கி மெயின் ரோடு வழியாக டானாபுதூர் கெ.ஒ.ம அரசு மகளிர் பள்ளியில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் கெ.ஒ.ம அரசு மகளிர் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் உள்பட 1500 இக்கும் மேற்பட்டோர் பங்கு கொண்டனர்.




0 comments:

Post a Comment