தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, December 1, 2014

திம்பம் மலைப்பாதையில் மீண்டும் ஆள்கொல்லி சிறுத்தை தாக்கி தொழிலாளி பலி







திம்பம் மலைப்பாதையில் மீண்டும் ஆள்கொல்லி சிறுத்தை தாக்கியதில் கூலித்தொழிலாளி பலியானார்.இச்சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடக மாநிலம் கொள்ளேகால் நொக்கஹள்ளி என்ற இடத்தில் கத்திரிக்காய், உருளைக்கிழங்கு பாரம் ஏற்றிய காய்கறி மினிலாரி, மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை ஓட்டுநர் ரமேஷ் ஓட்டினார். அதில் நொக்கஹள்ளியைச் சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஸ்ரீவாசன்(35),ஜடையன்(32) ஆகியோரும்  வந்தனர்.  புதன்கிழமை இரவு திம்பம் மலைப்பாதை 25-ஆவது வளைவு பாதையில் திரும்பும்போது மினிலாரி பழுதாகி நின்றது. இதையடுத்து, 3 பேரும் லாரியை அதே இடத்தில் நிறுத்துவிட்டு மற்றொரு வேனை வரவழைத்து அதில் காய்கறிகளை ஏற்றினர். அதன்பிறகு, ஓட்டுநர் ரமேஷ் காய்கறி வேனில் சத்தி சென்றுவிட்டார்.  தொழிலாளர்கள் இருவரும் பழுதாகி நிற்கும் வேனில்  தங்கியிருந்தனர்.

இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை ஸ்ரீவாசன் மலம் கழிப்பதற்காக வனத்தையொட்டியுள்ள இடத்திற்கு சென்றார். அப்போது, அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை ஸ்ரீவாசனினை தாக்கியது. அவரை காட்டுக்குள் இழுத்துச் சென்று கடித்துக் கொன்றது.  இதனை நேரில் பார்த்து உறைந்துபோன மற்றொரு தொழிலாளி ஜடையன், அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி நடந்த சம்பவத்தை கூறினார்.  அதனைத் தொடர்ந்து, 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுசேர்ந்தபடி வரிசையாக சென்றன. பின்னர்,அவர்கள் நடந்த சம்பவத்தை பண்ணாரி சோதனைசாவடியில் பணியில் இருந்த வனத்துறை மற்றும் காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து, சத்தி புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநர் கே.ராஜ்குமார் மற்றும் வனத்துறையினர் வியாழக்கிழமை சம்பவயிடத்தை ஆய்வு செய்தனர். மலைப்பாதையில் இருந்து சுமார் 50 அடி சரிவுபாதையில் அடர்ந்த புதர்மறைவில் ஸ்ரீவாசன் சடலம் கிடப்பது தெரியவந்தது. சடலத்தின் அருகில் சிறுத்தை பதுங்கியிருக்கலாம் என அஞ்சிய வனத்துறையினர் வானத்தை நோக்கி  துப்பாக்கியால் சுட்டபடி காட்டுக்குள் சென்றனர்.  புதர்மறைவில் கிடந்த ஸ்ரீவாசன் சடலத்தை  அவர்கள் மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன், இதே பகுதியில் வேன் டிரைவர் முகமது இலியாஸ் மற்றும் வனக்காவலர் கிருஷ்ணன் சிறுத்தையால் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து புலிகள் காப்பக இணை இயக்குநர் கே.ராஜ்குமார் கூறியது: இரவு நேரங்களில் வனவிலங்குகள் அதிகம் நடமாடாடும் பகுதி என்பதால் வாகன ஓட்டிகள் வனச்சாலையில் நடமாடுவதை தவிர்க்கவேண்டும். தற்போது, திம்பம் பாதையில் காமிராக்கள் வைத்து ஆட்கொல்லி சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். இரவுமுழுவதும் வனத்துறையின் ரோந்து படையினர் தீவிர கண்காணிப்பு ஈடுபட்டு வருகின்றனர். மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றால் உடனடியாக பண்ணாரியில் உள்ள ரோந்து படையினருக்கு தகவல் தெரிவிக்குமாறும் அவர்கள் ஓட்டுர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளித்து அழைத்துச் செல்வார்கள் என்றார்.   

0 comments:

Post a Comment