தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, November 1, 2014

புன்செய் புளியம்பட்டியில் மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு குறித்த செயல்முறை கூட்டம்



புன்செய் புளியம்பட்டி நவம்பர் 1:

புன்செய் புளியம்பட்டியில்  மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு குறித்த செயல்முறை கூட்டம் கெ.ஒ.ம.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கெ.ஒ.ம.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கே.ஓதியப்பன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் கோமதி முன்னிலை வகித்தார். கோபி மின்பகிர்மான வட்டம் சத்ய கோட்டம் புளியம்பட்டி உபகோட்ட உதவி செயல்பொறியாளர் எ. ராபர்ட்ராஜ் மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு குறித்து சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் மின்சாரத்தை சிக்கனமாக செலவழிக்க வேண்டும். வீணாக பகல் நேரங்களில் மின்விளக்குகளை எரிய விடக்கூடாது, மின்கசிவு ஏற்பட்டால் உடனே மின்வாரியத்தை அணுக வேண்டும்.   மேலும் மழைகாலங்களில் அறுந்து கிடக்கும் மின்சார கம்பிகளை மிதிக்க கூடாது உள்பட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். பின்னர்  பொறியாளர்கள் திருஞானசெல்வி, சுரேஷ், கோவிந்தராஜ் ஆகியோர் விளக்கஉரை மற்றும் செயல்விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் புன்செய் புளியம்பட்டி மின்ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உள்பட 600 இகும் மேற்பட்டோர் பங்கு கொண்டார்கள்.

0 comments:

Post a Comment