தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, April 13, 2014


சத்தியமங்கலம் ஒன்றியத்தில் அதிமுகவினர் வாக்குசேகரிப்பு

சத்தியமங்கலம்,ஏப் 13:
நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து சத்தியமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் அதிமுகவினர் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தனர்.


சத்தியமங்கலம் அடுத்துள்ள  அரசூர் வாரச்சந்தையில் ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், சத்தி ஒன்றிய அதிமுக செயலாளர் வி.சி.வரதராஜ் ஆகியோர் பிரசாரத்தை துவக்கி வைத்தனர்.
அரசூர், மாக்கினாம்கோம்பை,இண்டியம்பாளையம், தணடாம்புதூர், மங்களபுரம்,தேவங்கபுரம்,மேட்டுப்புதூர்,கணேசபுரம், அரசூர் காலனி,தாசநாயக்கனூர், அண்ணாநகர், கொத்துக்காடு,அரியப்பம்பாளையம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி,வீதியாக வாக்குசேகரித்தனர்.

பள்ளி மாணவ,மாணவிகளுக்கு மடிக்கணினி, சைக்கிள், இலவச பஸ் பாஸ், ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி மற்றும் விலையில்லா பொருள்கள் வழங்குதல் போன்ற சாதனைகளை விளக்கி அவர்கள் வாக்கு சேகரித்தனர். இதில் ஈரோடு மாவட்ட் ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், சத்தி ஒன்றிய அதிமுக செயலாளர் வி.சி.வரதராஜ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.கே.பழனிச்சாமி,அம்மா பேரவை பாசறை கொத்துக்காடு சிர்ஞ்சீவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment