தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, April 8, 2014

அகழியில் தவறி விழுந்த குட்டி யானை பலி


 
சத்தியமங்கலம் அடுத்த எக்கத்தூர் வனத்தையொட்டியுள்ள அகழியில் இறந்த நிலையில் கிடந்த குட்டியானையின் சடலத்தை வனத்துறையினர் கைப்பற்றினர். 

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் வனச்சரகம், கடம்பூர் மலைப்பகுதியில் எக்கத்தூர் பீட், பராபெட்டா வனப்பகுதி ஜோடிமத்துப்பள்ளம் அருகே வனவிலங்குகள் வெளியேறாமல் தடுக்க வெட்டப்பட்ட அகழியில் குட்டியானை ஒன்று இறந்து கிடப்பதாக சத்தி வனச்சரக அலுவலர் எஸ்.சண்முகத்திற்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.  இதையடுத்து,  வனத்துறை அலுவலர்கள் மற்றும் கால்நடைமருத்துவர்  என்.எஸ்.மனோகரன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சம்பவயிடத்திற்கு சென்று  ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, குட்டியானயின் அருகே தாய்யானை நின்றுகொண்டு பிளிறியதால் குட்டியானையின் சடலத்தை உடனடியாக மீட்கும் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டது. பட்டாசு வெடித்து தாய்யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். 

பின்னர், குட்டியானையின் சடலத்தை கைப்பற்றி அதே இடத்தில் பரிசோதனை செய்தனர்.  2 மாதமுள்ள  ஆண் குட்டியானை, தாயுடன் சென்றபோது அகழியில் தவறி விழந்துள்ளது. அகழியின் ஆழம் 8 அடிக்கும் மேலாக உள்ளதால் தாய்யானையால் குட்டியை மீட்க இயலவில்லை. குட்டியானை அகழியில் விழும்போது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் பலவீனமாக உள்ள குட்டியானை சம்பவயிடத்திலேயே இறந்துள்ளது தெரிய வந்ததுள்ளது பரிசோதனைக்குப்பின் யானையின் சடலத்தை அதே இடத்தில் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு உணவாக   விடப்பட்டது.

0 comments:

Post a Comment