சிந்தாமணி
வித்யாலயா பள்ளியின் 35 வது ஆண்டுவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் டி. ராமசாமி வரவேற்றார். பவானிசாகர் ஒன்றிய
உதவி தொடக்க கல்வி அலுவலர் எஸ்.தேவேந்திரன் தலைமை தாங்கினார். கூடுதல்
தொடக்க கல்வி அலுவலர் கார்த்திக் முன்னிலை வகித்தார். கோவை ராமகிருஷ்ணா கலை
அறிவியல் கல்லூரி கணினி துறை தலைவர் சி.ஆர்.சக்திவேல் சிறப்புரை ஆற்றினர்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்
மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாணவ மாணவியரின் கண்கவர்
கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள்,
பெற்றோர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கு கொண்டனர். நிறைவாக
பள்ளி நிர்வாகி லோகநாதன் நன்றி கூறினார்.

0 comments:
Post a Comment