தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, April 3, 2014

' தேர்தல் ஆணையம் மீது வழக்கு தொடர்வேன் '- தமிழக முதல்வர்  ஜெயலலிதா
 

நாமக்கல்: தேர்தல் ஆணையம் இதுவரை இல்லாத கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது என்றும், இது தொடர்பாக வழக்கு தொடரப்படும் என்றும் நாமக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெ., பேசுகையில் குறிப்பிட்டார்.

நாமக்கல்லில் அ.தி.மு.க., வேட்பாளர் பி.ஆர்.சுந்தரத்தை ஆதரித்து தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இன்று (ஏப்ரல் 3 சனிக்கிழமை) பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது : வரும் லோக்சபா தேர்தல் பொருளாதார சீரழிவில் இருந்து நாட்டை மீட்கும் தேர்தல்; நாமக்கல் தொகுதிக்கு உட்பட பகுதிகளில் கடந்த 34 மாதங்களில் செய்துள்ளோம்; சாலைகள் அமைக்க நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது; பள்ளிப்பாளையம் பகுதியில் புதிதாக சித்த வைத்திய மையம் அமைக்கப்பட்டுள்ளது; கொல்லிமலையை சுற்றுலா தலமாக மாற்ற நிதி ஒதுக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டுள்ளது; நாமக்கல்லில் 2 பாலங்கள் கட்டப்பட்டுள்ளது;

நாமக்கல், ராசிபுரம் வட்டங்களை சீரமைத்து கொல்லிமலை வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது; தீரன் சின்னமலைக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது; காங்., திமுக செயல்பாடுகளால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்; கருணாநிதி சுட்டிக்காட்டுபவர் தான் நாட்டின் பிரதமராக முடியும் என்றால் அவர் சுட்டிக்காட்டிய காங்., பிரதமர் நாட்டிற்கும், தமிழகத்திற்கும் என்ன செய்தார்; தமிழ் இனத்தை அழித்தது போதாதா? இன்னும் எதற்காக அவர் சுட்டிகக் காட்டுபவர் பிரதமராக வர வேண்டும்; அதிமுக.,விற்கு அளிக்கும் ஓட்டு தமிழர்களையும், தமிழகத்தையும் வளப்படுத்துவதற்கான ஓட்டு. 2 ஜி ஸ்பெக்டரம் ஊழல் செய்து இந்திய வளத்தை சுரண்டிய தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும். செய்வீர்களா ?

வேட்பாளர் பெயரை பயன்படுத்தி அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டினாலோ, பெயரை உச்சரித்தாலோ அதற்கான செலவு வேட்பாளரின் தேர்தல் கணக்கில் சேரும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இது சரியானதல்ல . எனக்கு பெருகி வரும் ஆதரவை கண்டு எதிர்கட்சியினர் விரக்தியும், மிரட்சியும் அடைந்துள்ளனர். பொதுமக்கள் தாங்களே வாகனத்தில் வந்தாலும், இது வேட்பாளர் செலவில் சேர்க்கப்படும் என்பது எந்த வகையில் நியாயம்? என்னை பார்க்கவும், எனது பேச்சை கேட்கவும் மக்கள் வருவது இயற்கையானது தான், பதாகைகள் மற்றும் கட் அவுட் வைப்பதும் வழக்கமான அரசியல் கலாச்சாரம்தான். 1952 முதல் இது வழக்கத்தில் இருந்து வருகிறது. தேர்தல் என்ற வந்து விட்டால் முற்றிலும் ஸ்தம்பிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.

ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடிப்பது போல வேட்பாளரை செயல்பட முடியாமல் உத்தரவுகளை தேர்தல் கமிஷன் பிறப்பித்து வருகிறது. ஜனநாயகத்திற்கு புறம்பானது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவால் வேட்பாளர் இங்கு வர முடியவில்லை. இதனால் நாமக்கல் தொகுதி வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

0 comments:

Post a Comment