தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, April 5, 2014

வாக்காளர் விழிப்புணர்வு பயிற்சி



 சத்தியமங்கலம், ஏப்.6. பவானிசாகர் வட்டாரத்தில் உள்ள கற்கும் பாரதம்
திட்ட மைய பொறுப்பாளர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு குறித்த ஒருநாள்
பயிற்சி முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தில் நடைபெற்றது. பயிற்சியினை வட்டார மேற்பார்வையாளர் (பொறுப்பு) தனலட்சுமி தொடங்கி வைத்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் சுதாகரன் மைய பொறுப்பாளர்களுக்கு பயிற்சியளித்தார். வாக்காளர் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி வாசிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும், வாக்களிக்கும் இயந்திரத்தை பயன்படுத்தும் முறை, வாக்களிக்க தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் பவானிசாகர் வட்டாரத்தில் பணிபுரியும் அனைத்து மையத் தொடர்பாளர்கள் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment